ஜெய்ஸ்வால் அவுட்டா.. இல்லையா? - ஐசிசி விதி சொல்வது என்ன?

3 weeks ago 13

Last Updated:December 30, 2024 5:26 PM IST

Yashasvi Jaiswal: மேல் எழும்பிய பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முயன்றபோது அவரை கடந்து, கீப்பர் அலெக்ஸ் கேரியின் கைகளுக்கு பந்து சென்றது. பந்து மட்டையில் படவில்லை என்பது போல் தோன்றியதால் கள நடுவர், 3 ஆவது நடுவரின் உதவியை நாடினார்.

News18

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஜெய்ஸ்வாலுக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 340 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வந்தபோது, இந்திய அணி 140 ரன்களுக்கு அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் இருந்தது. 71 ஆவது ஓவரில் களத்தில் 84 ரன்களுடன் இருந்த ஜெய்ஸ்வாலுக்கு பாட் கமின்ஸ் பந்து வீசினார்.

மேல் எழும்பிய பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முயன்றபோது அவரை கடந்து, கீப்பர் அலெக்ஸ் கேரியின் கைகளுக்கு பந்து சென்றது. பந்து மட்டையில் படவில்லை என்பது போல் தோன்றியதால் கள நடுவர், 3 ஆவது நடுவரின் உதவியை நாடினார்.

அப்போது வீடியோவை ஆராய்ந்த மூன்றாவது நடுவர், பந்து மட்டையில் பட்டதாக கருதி ஜெய்ஸ்வால் அவுட் என அறிவித்தார். ஆனால் பந்து மட்டையை கடந்தபோது ஸ்னிக்கோ மீட்டரில் எந்த அதிர்வும் பதிவாகவில்லை. இதையடுத்து களநடுவர் ஜெய்ஸ்வாலை வெளியேற அறிவுறுத்தினார்.

Also Read | OTT: மிரள வைக்கும் திரில்லர்.. நொடிக்கு நொடி சஸ்பென்ஸ்.. வீக் எண்ட்டுக்கு ஏற்ற படம் இதுதான்!

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததை அடுத்து பின்வரிசை வீரர்களும் வரிசையாக ஆட்டமிழந்து நடையை கட்டியதால் இந்திய அணி தோல்வியடைந்தது. 3 ஆவது நடுவரின் முடிவை விமர்சித்துள்ள முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர், ''தொழில்நுட்பத்தில் தடயம் இருந்த போதிலும், அதனை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது'' என்றும் பின்னர் ''அந்த தொழில்நுட்பம் எதற்கு'' என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐசிசி விதி என்ன சொல்கிறது?

ஐசிசி விதியின்படி, கள நடுவர் அறிவித்த முடிவை மாற்ற மூன்றாவது நடுவர் தெளிவான ஆதாரங்களை கொண்டிருக்க வேண்டும். அதேபோல், ஸ்னிக்கோ மீட்டரில் எந்த அதிர்வும் பதிவாகவில்லை என்றாலும், நாட் அவுட் கொடுக்க வேண்டும் என்கிறது விதி. எனினும், ஒரு முடிவு குறித்து மூன்றாவது நடுவர் அதிக நம்பிக்கை கொண்டிருந்தால் அவற்றை மாற்றி அறிவிக்கலாம் என்றும் ஐசிசி விதி சொல்கிறது.

இதன் அடிப்படையிலேயே, ஸ்னிக்கோ மீட்டரில் பந்து உரசியதற்கான எந்த அதிர்வும் இல்லை என்றாலும், பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டை தாண்டிச் சென்ற பிறகு தன் திசையிலிருந்து விலகிச் செல்வது போல் இருந்தது.

இது கள நடுவரின் முடிவை மாற்ற போதுமானது என்று மூன்றாவது நடுவர் உறுதியாக நம்பினார். இதனை அடிப்படையாக வைத்து ஜெய்ஸ்வால் அவுட் என்கிற முடிவுக்கு மூன்றாவது நடுவர் வந்தார். அதனாலேயே "பந்து தன் பாதையிலிருந்து விலகிச் செல்வது கண்கூடாக தெரிவதால் அவுட் கொடுக்கிறேன்" என்று மூன்றாவது நடுவர் அறிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

December 30, 2024 5:23 PM IST

Read Entire Article