Last Updated:December 12, 2024 5:50 PM IST
Flower Price |விழுப்புரத்தில் பூக்களின் வரத்துக்குறைந்துள்ளதால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
மும்மடங்காக உயர்ந்துள்ள பூக்கள் விலை
விழுப்புரம் மாவட்டத்தில், கார்த்திகை மாதம் மற்றும் தொடர் கனமழை காரணமாக பூக்களின் வரத்துக்குறைந்துள்ளதால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில் வியாபாரிகள், திண்டிவனம், பாண்டிச்சேரி, சென்னை போன்ற பல பகுதிகளிலிருந்து பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இச்சந்தையில் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் தொடர் கன மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை ஏறி உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். முக்கியமாக குண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம் போன்ற மலர்கள் விலையேற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது பூக்களின் விலை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
விழுப்புரம் மலர் சந்தையில் கடந்த நாட்களில் 600-க்கு விற்கப்பட்ட குண்டு மல்லிகைப்பூ கிலோ 1400 லிருந்து 1500 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை கிலோ 1000 க்கும், கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ கிலோ 180 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட பன்னீர் ரோஸ் கிலோ 320 ரூபாய்க்கும், கலர் சாமந்தி கிலோ 260 ரூபாய்க்கும், காக்கட்டான் கிலோ 1000 ரூபாய்க்கும், அரளி கிலோ 600 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 700 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 100 ரூபாய்க்கும், கேந்தி சாமந்தி 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கும், கல் ரோஸ் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து பலதரப்பட்ட பூக்கள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில் விற்கப்படுவதால், விலையேற்றம் இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 12, 2024 5:50 PM IST