வைட்டமின் டி உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வலுவான எலும்புகள், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் தசை செயல்பாடு ஆகியவற்றை பராமரிக்க வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமானது
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 23, 2024, 3:17 PM IST Published by
Sivaranjani E
01
வைட்டமின் டி உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வலுவான எலும்புகள், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் தசை செயல்பாடு ஆகியவற்றை பராமரிக்க வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது சிறுநீரக பாதிப்பு, குமட்டல் மற்றும் இரத்தத்தில் கால்சியம் குவிப்புக்கு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், இதன் விளைவாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
02
வைட்டமின் டி இன் முக்கிய ஆதாரம் சூரிய ஒளி ஆகும். வைட்டமின் டி ஆனது நாம் உண்ணும் உணவுகளில் இருந்து வருகிறது, கூடுதலாக சூரிய ஒளியில் இருந்து வெளிப்படுத்துகிறது. எனவே உடலில் வைட்டமின் டி அளவை மேம்படுத்த சிறந்த வழி சிறிது சூரிய ஒளியைப் பெறுவதாகும். இது தவிர வைட்டமின் டி அதிகரிக்க இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
03
சூரிய ஒளி: இந்த நாட்களில் பெரும்பாலான மக்கள் வைட்டமின் டி குறைபாட்டால் சிரமப்படுகிறார்கள். உண்மையில், வைட்டமின் டி அதிகரிக்க, சூரிய ஒளியில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சூரியக் கதிர்கள் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும். அதனால்தான் 15 முதல் 20 நிமிடங்கள் வெயிலில் செல்வ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் உங்கள் உடல் இயற்கையாக வைட்டமின் டி-ஐ பெறுகிறது.
04
பசும் பால்: பாலில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியத்துடன் நல்ல அளவு வைட்டமின் டி உள்ளது. குறிப்பாக பசும் பாலில் இயற்கையாகவே வைட்டமின் டி நிறைந்துள்ளது, இதனுடன், ஜீரணிக்க எளிதானது. எனவே இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
05
சீஸ் வகைகள்: ரிக்கோட்டா, செடார் அல்லது ஸ்விஸ் போன்ற சீஸ் வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்., ஏனெனில் இந்த சீஸ் வகைகளில் வைட்டமின் டி சிறிய அளவில் உள்ளன.
06
காளான்கள்: மைடேக் மற்றும் ஷிடேக் போன்ற சில வகை காளான்களில் இயற்கையாகவே வைட்டமின் டி நிறைந்துள்ளது. சமைப்பதற்கு முன் காளான்களை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்திருப்பது, அவற்றின் வைட்டமின் டி அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதை குறைந்த எண்ணெயில் சமைத்தால் உடல் எடையும் குறையும்.
07
டோஃபு: டோஃபு மற்றும் சோயா போன்ற உணவுகளில் கால்சியம், ப்ரோடீன் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளது. இந்த தயாரிப்புகளை வாங்கும் போது, வைட்டமின் டி உள்ளதா என்பதை உறுதிப்படுத்த லேபிள்களை சரிபார்க்கவும்.
- FIRST PUBLISHED : December 23, 2024, 3:17 PM IST
சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் டி-ஐ அதிகரிக்க 5 வழிகள்..!
வைட்டமின் டி உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வலுவான எலும்புகள், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் தசை செயல்பாடு ஆகியவற்றை பராமரிக்க வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது சிறுநீரக பாதிப்பு, குமட்டல் மற்றும் இரத்தத்தில் கால்சியம் குவிப்புக்கு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், இதன் விளைவாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
MORE
GALLERIES