நடப்பு நிதியாண்டின் 4 ஆவது காலாண்டுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 1, 2025, 12:45 PM IST Published by
Raj Kumar
01
சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
02
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது.
03
நடப்பு நிதியாண்டின் 4 ஆவது காலாண்டுக்கான அதாவது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையிலான, சிறுசேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
04
அதில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் முந்தைய காலாண்டில் அமலில் இருந்த வட்டி விகிதமே நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.
05
இதன்மூலம், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8.2 சதவிகிதம், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 7.7 சதவிகிதம், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5 சதவிகிதமாக நீடிக்கும்.
- FIRST PUBLISHED : January 1, 2025, 12:45 PM IST
Investment | சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா..? அப்போ இந்த நியூஸ் உங்களுக்குத்தான்..!
சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
MORE
GALLERIES