வெப்பநிலை குறையும் போது, வைரஸ்களை எதிர்த்துப் போராடவும், ஆற்றல் மட்டங்களை பராமரிக்கவும் உடலுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சரிவிகித டயட் மற்றும் சரியான நீர்ச்சத்து அவசியம் என்றாலும், குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை உங்கள் தினசரி டயட்டில் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.
- 2-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 2, 2025, 6:54 PM IST Published by
Sivaranjani E
01
குளிர்காலங்களில் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பருவகால நோய்களின் அலைகளை கொண்டு வருகிறது. வெப்பநிலை குறையும் போது, வைரஸ்களை எதிர்த்துப் போராடவும், ஆற்றல் மட்டங்களை பராமரிக்கவும் உடலுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சரிவிகித டயட் மற்றும் சரியான நீர்ச்சத்து அவசியம் என்றாலும், குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை உங்கள் தினசரி டயட்டில் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.
02
இந்த பானங்கள் சுவையானது மட்டுமல்ல, வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த குளிர்காலத்தில் உங்களை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும் ஒன்பது இயற்கை பானங்கள் இதோ...
03
பொன்னிற மஞ்சள் பால் : பாரம்பரிய இந்திய பானமான மஞ்சள் பாலில், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பிய குர்குமின் உள்ளது. இரவு தூங்குவதற்கு முன் சூடான மஞ்சள் பால் குடிப்பது தொண்டை புண் ஆற்றவும், வீக்கத்தை குறைக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அதிகபட்ச நன்மைகளுக்கு இந்தப் பாலில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும்.
04
துளசி மற்றும் இஞ்சி டீ : துளசி மற்றும் இஞ்சி ஆகியவை நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆயுர்வேத மருந்துகளாகும். துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும், இஞ்சி வீக்கத்தைக் குறைப்பதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்தது. ஒரு கப் துளசி மற்றும் இஞ்சி தேநீர், சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும்.
05
நெல்லிக்காய் ஜூஸ் : இந்திய நெல்லிக்காய், வைட்டமின் சி நிறைந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். பிரெஷான நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது; சருமத்தை புத்துயிர் பெற வைக்கிறது மற்றும் குளிர்கால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.
06
சூடான தண்ணீரில் எலுமிசை மற்றும் தேன் கலந்து பருகுங்கள் : இந்த உன்னதமான பானம் ஒரு இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது,. பூஞ்சை எதிர்ப்பு தன்மை கொண்ட தேன், தொண்டையை ஆற்றி, இயற்கையான ஆற்றலை அளிக்கிறது. காலையில் இந்த பானத்தை உட்கொள்வதன் மூலம் நச்சுகளை வெளியேற்றி, உங்களை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
07
அஸ்வகந்தா காஃபி : ஆயுர்வேதத்தில் பிரபலமான மூலிகையான அஸ்வகந்தா, மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திறனுக்காக அறியப்படுகிறது. அஸ்வகந்தா பொடியை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து, தேன் சேர்த்து குடித்தால், குளிர்ந்த மாதங்களில் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
08
இலவங்கப்பட்டை கலந்த க்ரீன் டீ : கிரீன் டீயில் கேடசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதால், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையை சேர்ப்பது சுவையை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
09
கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் : வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது; இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் நச்சுத்தன்மையை நீக்குகிறது.
10
மசாலா டீ : ஒரு கப் மசாலா டீ குளிர்காலத்தில் குடிப்பது சிறந்த பலனைத் தரும். இந்த டீயில் பயன்படுத்தப்படும் ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
11
மூலிகை கஷாயம் : பல இந்திய வீடுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் முக்கியமான பானமாக இந்த கஷாயம் உள்ளது. மூலிகைகள் மற்றும் துளசி, இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களால் இது தயாரிக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த கஷாயம் சளிக்கு எதிராக போராட உதவுகிறது; மூக்கடைப்பை நீக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- FIRST PUBLISHED : January 2, 2025, 6:54 PM IST
குளிர்காலத்தில் அதிகரிக்கும் சளி, இருமல்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 9 பானங்கள்.!
குளிர்காலங்களில் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பருவகால நோய்களின் அலைகளை கொண்டு வருகிறது. வெப்பநிலை குறையும் போது, வைரஸ்களை எதிர்த்துப் போராடவும், ஆற்றல் மட்டங்களை பராமரிக்கவும் உடலுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சரிவிகித டயட் மற்றும் சரியான நீர்ச்சத்து அவசியம் என்றாலும், குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை உங்கள் தினசரி டயட்டில் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.
MORE
GALLERIES