சல்மான் கான் படத்தில் சந்தோஷ் நாராயணன்… டீசர் நாளை ரிலீஸ்

3 weeks ago 9

Last Updated:December 26, 2024 9:24 PM IST

கல்கி படத்தில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் அனிருத் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

News18

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் டீசர் நாளை ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும், தனது தனித்துவமான இசையால் சந்தோஷ் நாராயணன் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அட்டகத்தி, கபாலி, ஜிகர்தண்டா வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கபாலி படத்தில் இவரது பின்னணி இசை அதிகம் பேசப்பட்டது.

தமிழ் சினிமாவை தொடர்ந்து சந்தோஷநாராயணன் தெலுங்கில் வெளியான கல்கி 2892 ஏடி படத்தின் மூலமாக டோலிவுட்டில் அறிமுகமானார். கல்கி படத்துடைய பாடல்கள் அதிகம் கவராவிட்டாலும் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இந்தி சினிமாவிலும் சந்தோஷ் நாராயணன் அறிமுகமாக உள்ளார். இந்தியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கவனிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் பாடல்களுக்கான இசையை பிரிதம் அமைக்கிறார்.

கல்கி படத்தில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் அனிருத் இந்தி சினிமாவில் அறிமுகமானார.

இதையும் படிங்க - ஸ்குவிட் கேம் 2 முதல் சிங்கம் அகெய்ன் வரை… இந்த வார ஓடிடி-யில் மிஸ் பண்ணக் கூடாத வெளியீடுகள்…

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைத்துள்ள சிக்கந்தர் படத்தின் டீசர் நாளை காலை 11.07-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


This is truly a wild dream being realised .My journey in Bollywood starts tomorrow with our dear Bhaijaan @BeingSalmanKhan sir. Proud to score this film. Let’s gooooooo 💥💥💥💥💥🦉🦉 #SikandarTeaser @ARMurugadoss pic.twitter.com/3kgx8e1Ogi


— Santhosh Narayanan (@Music_Santhosh) December 26, 2024

இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில், மிகப்பெரும் கனவு நனவாகியுள்ளது. இந்தி சினிமாவில் எனது பயணம் சல்மான் கானுடன் தொடங்கியுள்ளது. சிக்கந்தர் படத்திற்கு பின்னணி இசையமைப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

First Published :

December 26, 2024 9:24 PM IST

Read Entire Article