Last Updated:December 08, 2024 3:48 PM IST
காய்கறிகளில் கோவக்காயில் மட்டும் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தினமுமே உணவில் காய்கறிகளை எடுத்துக் கொள்வது என்பது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் வாய்ந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். ஏனென்றால் காய்கறிகளில் வைட்டமின்கள், இரும்பு, கால்சியம் போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றது. அதில் குறிப்பாக கோவக்காயில் தலை முதல் வரை உள்ள ஒரு சில பிரச்சனைகளுக்கு பலவிதமான சத்துக்கள் இருப்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாமா...
1.கோவக்காயில் உள்ள கசப்பு தன்மை மற்றும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைப்பதால் இது நேச்சுரல் இன்சுலின் என அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், அடிக்கடி கோவக்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
2.ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் கோவக்காயில் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய கசப்பு தன்மை வயிற்றில் இருக்கக்கூடிய கொக்கிப்புழு, நாடா புழு போன்ற புழுக்களை அழித்து வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல், புழுக்களின் முட்டைகளையும் அழிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடல் புழு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கோவக்காய் பொரியல் சாப்பிடுவது நல்லது.
3.மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவதால், வயிறு உப்புசம் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க, உணவில் கோவக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் வாசிக்க : திருவள்ளுவருடன் செல்பி எடுங்க.... நம்பமுடியாத பரிசை வெல்லுங்கள்..!!
4.கோவக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகளின் அளவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கோவக்காய் சிறந்த உணவாக இருக்கிறது. கோவக்காய் அடிக்கடி சாப்பிட்டு வர, உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை இழப்பிற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல், உடலில், இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் இரத்த சோகையை முற்றிலுமாக தடுக்கிறது.
5. இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இருதய சுவர்கள் சுருங்கி விரிவதற்கு அவசியமாக இருக்கும் பொட்டாசியம் கோவக்காயில் நிறைந்துள்ளது. ஆகையால், இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
6. கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், மலச்சிக்கல், பைல்ஸ், இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் போன்றவை விலகும். குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 08, 2024 3:48 PM IST