கோயம்புத்தூர் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. Capgemini மெகா முதலீடு, அதுவும் 'இந்த' இடத்தில்..!

1 week ago 11

Updated: Wednesday, January 8, 2025, 10:54 [IST]

கோவை மாவட்டம் தமிழ் நாட்டிலேயே சிறந்த தொழில் நகரமாக திகழ்கிறது. இங்கு தொழில்துறை மட்டுமல்லாது, விவசாயம், சுற்றுலா என எண்ணற்ற துறைகளில் சிறந்து விளங்குகிறது. அதேபோல், பல்வேறு கோவில்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக கோவை மாவட்டம் பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டு இங்கு முதலீடு செய்கின்றன.

அந்த வகையில், தற்போது கோவை விளாங்குறிச்சி எல்காட் ஐடி பார்க்கில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ஜெமினி டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ரூ.75 கோடி முதலீடு செய்து 1,621 ஐடி/ஐடிஇஎஸ் சேவை பணிகளை உருவாக்க உள்ளது. இதற்கான நிறுவனம் ஏற்கனவே 1.4 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்து தனது அலுவலகத்தை திறக்கவுள்ளது.

கோயம்புத்தூர் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. Capgemini மெகா முதலீடு, அதுவும் 'இந்த' இடத்தில்..!

இது முன்பு MEPZ SEZ யூனிட் அப்ரூவல் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட 16 திட்டங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இந்த திட்டங்களின் முதலீட்டால், மொத்தம் ரூ.138 கோடி முதலீடு மற்றும் 2,110 வேலைவாய்ப்புகள் தயாராகி உள்ளன.

அந்த வகையில், தற்போது இந்த ஐடி நிறுவனமான கேப்ஜெமினி டெக்னாலஜிஸின் ரூ.75 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. எனவே இதற்காக, கோவை விளாங்குறிச்சியில் எஸ்இஇசட் அலுவலகத்தில் சுமார் 1,621 ஐடி/ஐடிஇஎஸ் சேவை பணிகளுக்காக வேலைக்கு ஆட்சேர்ப்பு பணிகளை தொடங்க உள்ளது.

பொங்கலுக்கு பரிசு தொகுப்பில் ரூ.1000 வராது.. ஆனா இந்த ரூ.1000 பொங்கலுக்கு முன்னாடி வந்துரும்..!!பொங்கலுக்கு பரிசு தொகுப்பில் ரூ.1000 வராது.. ஆனா இந்த ரூ.1000 பொங்கலுக்கு முன்னாடி வந்துரும்..!!

முன்னதாக, கோவையில், MEPZ SEZ இன் வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தலைமையிலான யூனிட் அப்ரூவல் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் இந்த திட்டமும் ஒன்றாக உள்ளது. மேலும், இந்தக் கமிட்டி கடந்த திங்கட்கிழமை 16 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. எனவே கோவைக்கு ரூ.138 கோடி மதிப்பில் பல்வேறு முதலீடுகள் உறுதியான நிலையில், மொத்தம் 2110 புதிய வேலைகள் உருவாக்கப்பட உள்ளன.

தற்போது, கோவை விளாங்குறிச்சியில் ரூ.75 கோடி முதலீடு செய்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி கடந்த ஏப்ரல் 2024 முதல், MEPZ SEZ ரூ.4,546 கோடி முதலீடுகளைச் செய்துள்ளது. இது தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி பிராந்தியங்களில் உள்ள SEZகள் மற்றும் EOUகளில் 32,726 வேலைகளை உருவாக்கி உள்ளது.

நீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா? இதோ செல்வத்தை அதிகரிக்க உங்களுக்கான யூஸ்புல் டிப்ஸ்..!!நீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா? இதோ செல்வத்தை அதிகரிக்க உங்களுக்கான யூஸ்புல் டிப்ஸ்..!!

எனவே, இந்த MEPZ SEZ கமிட்டி வழங்கியுள்ள ஒப்புதல்கள் நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் உலகளவிலான வர்த்தக போட்டிகளில் SEZ இன் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது. எனவே, கோவையில் படித்து முடித்துவிட்டு வெளியூர்களுக்கு சென்று தங்கி வேலை செய்யும் இளைஞர்களுக்கு இதுவும் ஒரு வகையில் பயனளிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coimbatore Happy Capgemini Technology will invest rs 75 crore and create 1,621 IT/ITeS services jobs at ELCOT SEZ, Vilankurichi

Capgemini to create over 1,600 Jobs in Coimbatore with ₹75 crore investment This investment is part of MEPZ SEZ’s Unit Approval Committee initiative

Read Entire Article