கோப்பையை வழங்க கவாஸ்கரை அழைக்காதது ஏன்..? - ஆஸி கிரிக்கெட் விளக்கம்

1 week ago 11

Last Updated:January 06, 2025 8:21 AM IST

இது ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட். யார் வென்றால் என்ன? வெற்றியாளர்களுக்கு நானும் கோப்பையை வழங்கி இருப்பேன் என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

சுனில் கவாஸ்கர்

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கும்போது, சுனில் கவாஸ்கரை ஏன் அழைக்கவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியவுடன், போட்டிக்குப் பிந்தைய விழாவில் ஆஸ்திரேலியா அணிக்கு கோப்பையை வழங்க, ஆலன் பார்டர் அழைக்கப்பட்டு, கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பேசுபொருளானது. கோப்பையை வழங்கும் நிகழ்வில் சுனில் கவாஸ்கரை ஏன் அழைக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்… சுனில் கவாஸ்கர் ஆலோசனை…

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். “இந்திய அணி கோப்பையை கைப்பற்றியிருந்தால் சுனில் கவாஸ்கர் அவர்களுக்கு கோப்பையை வழங்கி இருப்பார். ஆனால் ஆஸி அணி தொடரை வென்றதால், ஆலன் பார்டர் அவர்களுக்கு கோப்பையை வழங்கினார். இருவரும் மேடையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என ஆஸி கிரிக்கெட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“இது ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட். யார் வென்றால் என்ன? வெற்றியாளர்களுக்கு நானும் கோப்பையை வழங்கி இருப்பேன்” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் “நான் மைதானத்திலேயே தான் இருந்தேன். ஆஸ்திரேலியா நன்றாக விளையாடியதால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். நான் இந்தியன் என்பதால் அவர்களுக்கு கோப்பையை வழங்கக்கூடாது என்பதல்ல. பார்டர் உடன் சேர்ந்து அவர்களுக்குக் கோப்பையை நான் மகிழ்ச்சியுடன் வழங்கியிருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

First Published :

January 06, 2025 8:16 AM IST

Read Entire Article