கேம் சேஞ்சர் படத்துக்கு நெகடிவ் ரிவ்யூ வராது… ஹீரோ ராம்சரண் உறுதி…

1 month ago 12

Last Updated:December 23, 2024 12:46 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது தந்தை என 2 கேரக்டரில் நடித்துள்ளார்

News18

கேம் சேஞ்சர் படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ வராது என்றும் சிறந்த தியேட்டர் அனுபவத்தை இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் படத்தின் ஹீரோ ராம்சரண் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். தெலுங்கில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அதிக பொருட்செலவில் இந்த படத்தை வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு தயாரித்துள்ளார்.

தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது தந்தை என 2 கேரக்டரில் நடித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்திற்கான புரமோஷனில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் குறித்து ராம்சரண் அளித்துள்ள பேட்டியில், உங்களுக்கு ஒரு படத்தை பிடிக்காவிட்டால் அந்த படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்களை நீங்கள் கூறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பை கேம் சேஞ்சர் திரைப்படம் உங்களுக்கு வழங்காது. இந்த படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ வராது.

இதையும் படிங்க - ‘என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது’ – அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த திரைப்படம் மிகச்சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கருக்கு இந்தியன் 2 திரைப்படம் சுமாரான வரவேற்பு கொடுத்த நிலையில் கேம் சேஞ்சர் அவருக்கு கம்பேக் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

First Published :

December 23, 2024 12:46 AM IST

Read Entire Article