கேம்சேஞ்சர் பாடல்களுக்கான செலவு… அதிர்ச்சி கொடுத்த ஷங்கர்

1 month ago 12

Last Updated:December 25, 2024 6:06 PM IST

'சிவாஜி', 'எந்திரன்', 'ஐ' உள்ளிட்ட படங்களில் பாடல் காட்சிகளுக்கு இதே போன்று தான் ஷங்கர் அதிகம் செலவிட்டிருந்தார். அதற்கு பலனாக அந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் படத்தின் ப்ரோமோஷனுக்கும் அதிகம் உதவின.

News18

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பாராட்டைப் பெற்ற ஷங்கர் தனது அடுத்த படமான 'கேம் சேஞ்சர்' படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகளுக்கு மட்டும் மிகப்பெரும் தொகையை செலவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'இந்தியன் 2' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் இந்த படத்துடைய மூன்றாம் பாகம் திரையரங்குகளில் வெளிவருமா? என்ற கேள்வி பரவலாக இருந்தது. இதற்கு பதில் அளித்த ஷங்கர், 'இந்தியன் 3' திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும்" கூறியிருந்தார்.

'இந்தியன் 2' படத்தை தொடர்ந்து ஷங்கர் தற்போது 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம்சரண் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இந்த திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி இடம் பெற்றுள்ளார். இந்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தந்தை என 2 கேரக்டரில் ராம்சரண் நடித்திருக்கிறார். தமிழில் 'வாரிசு' திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு 'கேம் சேஞ்சர்' படத்தை தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க - தமிழக அரசின் புதிய அரசாணை... திரையரங்கு கட்டணம் உயருமா..? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன தகவல்

இந்நிலையில் 'கேம் சேஞ்சர்' படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் சுமார் 92 கோடி ரூபாய் அளவுக்கு இயக்குனர் ஷங்கர் செலவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. பாடல் காட்சிகளுக்காக இயக்குனர் ஷங்கர் அதிக தொகையை செலவிடுவார் என்பது வழக்கமான ஒன்றுதான்.

'சிவாஜி', 'எந்திரன்', 'ஐ' உள்ளிட்ட படங்களில் பாடல் காட்சிகளுக்கு இதே போன்று தான் ஷங்கர் அதிகம் செலவிட்டிருந்தார். அதற்கு பலனாக அந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் படத்தின் ப்ரோமோஷனுக்கும் அதிகம் உதவின.

First Published :

December 25, 2024 6:06 PM IST

Read Entire Article