Last Updated:December 31, 2024 4:23 PM IST
இன்றைய காலத்தில் குழந்தையின்மை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. விந்தணு குறைபாட்டால் ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்குத் தீர்வாக இது அமைந்துள்ளது.
மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்குக் காரணங்களாகும்.
ஆண்களின் வயதுக்கு ஏற்ப மரபணு மாற்றம் ஏற்படுகிறது, இதன் விளைவாக விந்தணு குறையும் ஆபத்து அதிகரிக்கிறது. இதனால் ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பும் பல மடங்கு குறைகிறது. மேலும், ஆண்களுக்கு வயதாகும்போது, அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைகிறது என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகிறது.
இருப்பினும், இது போன்ற சில பிரச்சினைகளை ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். இந்தியா முழுவதும், குறிப்பாக வறண்ட பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது இந்த மூலிகை மரம் இதன் பூவின் உள்ளே சிறிய கருமையான விதைகள் இருக்கும். காட்டுச் செடியான இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
இதையும் படிங்க: Cracked Heels: குதிகால் வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க... வீட்டிலேயே ஈசியா சரிசெய்யலாம்...
பிரம்மதண்டு மரம் ஆங்கிலத்தில் இதனை Mexican prickly poppy என்பர். பிரம்மதண்டு மூலிகையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு மாமருந்தாகும். பிரம்மதண்டு இலை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காச்சி உடலில் பூச ஊறல் படர் தாமரை குணமாகும். பிரம்மத்தண்டின் இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையவைகள். இலை, விதை சூரணம் செய்து மூன்று அரிசி எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டுவர வரட்டு இருமல், சளி இருமல் குணமாகும்.
பிரம்மத்தண்டில் வடியும் பாலை கண்ணில் ஒரு சொட்டு விட்டுவர கண்வலி, சதை வளர்தல், கண்சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் அரிப்பு ஆகியவை தீரும். பிரம்மத்தண்டின் இலைச்சாற்றை 10 மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். கரப்பான், பேய்ச்சொறி, கை, கால், பாதங்களில் வரும் புண்கள் குணமாக இலையை அரைத்துப் பூசினால் விரைவில் நலம் பெறலாம்.
இந்த செடியின் வேர்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கவும். பின்னர் காலையிலும் மாலையிலும் அதை தவறாமல் குடித்து வந்தால் சில நாட்களில் இருமல் நீங்கும். சிறுநீர் பிரச்சனைகள் இருந்தால் நிவாரணம் கிடைக்கும். முட்கள் நிறைந்த பிரம்மதண்டு இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகிறது.
இதையும் படிங்க: உங்க சருமம் என்றும் இளமையாக ஜொலிக்கும்... தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்...
பலருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனால், குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த தாவரத்தின் பட்டையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆண்மைக்குறைவை 21 நாட்களில் குணப்படுத்தலாம்.
இந்த தாவரத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அனைத்து தோல் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இந்த செடி மருந்தாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 31, 2024 4:23 PM IST