Last Updated:December 29, 2024 2:06 PM IST
Fruits To Avoid In Winters | உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் பழங்கள் நமக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை வழங்குகின்றன.
குளிர் சீசனில் தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்...
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் பழங்கள் நமக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை வழங்குகின்றன. எனினும் அனைத்து பழங்களும் அனைத்து சீசனிற்கும் சாப்பிட ஏற்றது அல்ல. குளிர்காலத்தில், சில பழங்களை உட்கொள்வது அவற்றின் குளிர்ச்சி பண்புகள் அல்லது குளிர் கிளைமேட்டில் கெட்டுப்போகும் தன்மை காரணமாக நம் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். எனவே நீங்கள் எதிர்கொள்ளும் சீசனுக்கு ஏற்ப சரியான பழங்களை டயட்டில் சேர்த்து கொள்வது ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க உதவுகிறது.
உதாரணமாக, தர்பூசணி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிட்டால் அவை நம் உடல் வெப்பநிலையைக் குறைத்து நம்மை சளி அல்லது ஜலதோஷத்திற்கு எளிதில் பாதிப்படைய செய்துவிடும். அதேபோல வாழைப்பழங்கள் மற்றும் திராட்சை சளி உற்பத்திக்கு பங்களிப்பதோடு சுவாச பிரச்சனைகளை மோசமாக்கும். ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாக சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் ஏற்படலாம். அதேநேரம் அன்னாசி மற்றும் கொய்யா சத்தான பழங்கள் இருந்தாலும் தொண்டையில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள் மற்றும் விளைவுகள்...
குளிர்காலத்தில் தர்பூசணி, வாழைப்பழம் மற்றும் அன்னாசி போன்ற குளிர்ச்சி மற்றும் சளியைத் தூண்டும் பழங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது பருவகால நோய்கள் ஏற்படும் அபாயங்களை தடுக்க உதவும்.
தர்பூசணி
தர்பூசணி நம்மை ஹைட்ரேட் செய்யும் பழமாகும். இது அதன் குளிர்ச்சி விளைவு காரணமாக கோடையில் மக்களின் பிரபல தேர்வாக இருக்கிறது. ஆனால் குளிர்காலத்தில் தர்பூசணி எடுத்து கொள்வது உடல் வெப்பநிலையை குறைக்கலாம். இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சளி அல்லது சுவாச பிரச்சனைகளையும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
முலாம்பழம்
தர்பூசணியை போலவே முலாம்பழம் அதிக நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சி விளைவுகளை கொண்டுள்ளது. எனவே இதை குளிர் சீசனில் சாப்பிட்டால் பொருத்தமாக இருக்காது. மேலும் இந்த பழத்தை குளிர் சீசனில் சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைக்கும். குளிர் சீசனில் இதை உட்கொள்ளும் போது உடலுக்கு மேலும் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
வாழைப்பழங்கள்
மலிவு விலையில் கிடைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக வாழைப்பழங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதனை குளிர் சீசனில் சாப்பிட்டால் சளி உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, இதை சாப்பிடுபவர்கள் சளி, இருமல் அல்லது சுவாசப் பிரச்சனைகளால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். குளிர் சீசனில் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
அதிகப்படியான சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆனால் இவற்றின் அசிட்டிக் தன்மை காரணமாக குளிர்காலத்தில் இவற்றை அதிகமாக உட்கொண்டால் தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அசௌகரியத்தை தவிர்க்க சிட்ரஸ் பழங்களை அளவோடு சாப்பிடுவது முக்கியம்.
அன்னாசிப்பழங்கள்
இந்த பழத்தில் ப்ரோமைலைன் உள்ளது. இது சில ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் இதன் குளிர்ச்சி பண்புகள் மற்றும் அசிடிட்டி தன்மை தொண்டையை எரிச்சலூட்டும்.
பப்பாளி
பப்பாளி ஆரோக்கியமானதாக இருந்தாலும் இது "குளிர்ச்சியூட்டும்" பழமாக கருதப்படுகிறது. குளிர் சீசனில் இதை எடுத்து கொள்வது உடல் வெப்பநிலையை சட்டென்று குறைத்து குளிர் சார்ந்த அறிகுறிகளை மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
கொய்யா
கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும் இதன் சற்று கடினமான அமைப்பு மற்றும் குளிர்ச்சி தன்மை காரணமாக குளிர் சீசனில் தொண்டை புண் ஏற்படலாம். சரியாக கழுவிவிட்டு சாப்பிடுவது மற்றும் மிதமான நுகர்வு இந்த ஆபத்தை குறைக்கலாம்.
திராட்சை
குளிர் சீசனில் திராட்சைகள் குறிப்பாக ஃபிரெஷ்ஷாக இல்லாத போது சுவாச தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் அதிக சர்க்கரை சளி உற்பத்திக்கு பங்களிக்கும். குளிர்காலத்திற்கு ஏற்ற பழங்களாக கருதப்படும் ஆப்பிள்கள், மாதுளைகள் மற்றும் பெர்ரிக்களை டயட்டில் சேர்க்க கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கலாம் மற்றும் குளிர் சீசன் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
First Published :
December 29, 2024 2:06 PM IST