Last Updated:December 09, 2024 2:17 PM IST
Ginger Juice Benefits | குளிர்காலம் அல்லது மழைக் காலங்களில் பெரும்பாலானோர் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, இருமலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வறட்டு இருமல், மற்றொன்று சளியுடனான இருமல்.
பருவகால நோய்த் தொற்றுகளுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பை இஞ்சி வழங்குகிறது. இஞ்சி சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சில நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம்.
குளிர்காலம் அல்லது மழைக் காலங்களில் பெரும்பாலானோர் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, இருமலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வறட்டு இருமல், மற்றொன்று சளியுடனான இருமல். ஒருவர் பல நாட்களாக இருமலை அனுபவித்தால், அது பல நோய்களுக்கான அறிகுறியாகும். மேலும் இருமலானது ஒருவரை அசௌகரியமாக உணர வைக்கும். அதில் வறட்டு இருமல் வறட்சியான குளிர் காற்றினால் ஏற்படக்கூடியது. அதே சமயம் சளியுடனான இருமலின் போது சளி வெளிவரக்கூடும். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் எடுத்த எடுப்பிலேயே இருமலுக்கான சிரப் மற்றும் மருந்துகளை எடுப்பதற்கு பதிலாக இயற்கை வழிகளை முயற்சிப்பது சிறந்த பலனை அளிக்கும்.
நம் முன்னோர்கள் இருமலுக்கு இயற்கை வைத்தியங்களை தான் பின்பற்றினார்கள். அதில் இருமலுக்கு பயன்படுத்திய பொருள் தான் இஞ்சி. எனவே உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது, குளிர்கால சளி மற்றும் இருமலின் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கான சக்திவாய்ந்த இயற்கை மருந்தாகும். வைட்டமின்கள், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிரம்பிய இஞ்சி சாறு குளிர்கால நோய்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தீர்வாகும். நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண்களை நீக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும், பருவகால நோய்த் தொற்றுகளுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பையும் வழங்குகிறது. இஞ்சி சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சில நன்மைகள் பற்றி பார்ப்போம்.
இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஜிஞ்சரால் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இஞ்சியில் உள்ளன. இது சளி, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
தொண்டை புண் மற்றும் இருமல் நீங்கும்
இஞ்சி சாறு ஆனது தொண்டை புண் மற்றும் இருமலை போக்க உதவுகிறது. கூடுதலாக, இஞ்சியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சுவாச மற்றும் தொண்டை நோய்த் தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில் உதவுகின்றன.
சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது
இஞ்சியில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி பாக்டீரியல் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கம், சளி, இருமல் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை நீக்குகிறது. இதன் மருத்துவ குணங்கள் சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்தி, சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
இஞ்சி டைஜஸ்டிவ் என்சைம்ஸ் உற்பத்தியை தூண்டுவது மட்டுமல்லாமல் சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் இது, அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.
First Published :
December 09, 2024 2:17 PM IST