Natural Oils | குளிர்காலத்தில் முகத்தை சுத்தம் செய்ய, மக்கள் மிகவும் விலையுயர்ந்த க்ளென்சர்கள் மற்றும் ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்துகிறார்கள். இதில் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 19, 2024, 6:50 PM IST Published by
amudha
01
குளிர் காலத்தில் பலரின் சருமம் மிகவும் வறண்டு போகும். அதே சமயம் சிலரது முகம் எண்ணெய் பசையாகவும், மந்தமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் முகத்தை சுத்தம் செய்ய சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், பல சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
02
குளிர்காலத்தில் முகத்தை சுத்தம் செய்ய, மக்கள் மிகவும் விலையுயர்ந்த க்ளென்சர்கள் மற்றும் ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்துகிறார்கள். இதில் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. எனவே, குளிர்காலத்தில் உங்கள் முகத்தை பளபளப்பாகவும், தழும்புகள் இல்லாமல் இருக்கவும் பயன்படுத்தக் கூடிய 7 சிறந்த இயற்கை எண்ணெய்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
03
ரோஸ்ஷிப் எண்ணெய்: அத்தியாவசிய ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ரோஸ்ஷிப் எண்ணெய் ஆனது வறண்ட, மந்தமான சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது. இந்த எண்ணெய் ஆனது வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் குளிர்காலத்தில் பிரகாசமான பளபளப்பை ஊக்குவிக்கிறது.
04
எள் எண்ணெய்: எள் எண்ணெயில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ சருமத்திற்கு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சருமத்திற்கு நன்மை பயக்கும். சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. எள் எண்ணெயை கொண்டு உடல் மசாஜ் செய்தால் சோர்வு நீங்கும் மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும்.
05
ஆர்கான் ஆயில்: ஆர்கான் ஆயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இந்த ஆர்கான் எண்ணெய் ஆனது சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு மட்டுமின்றி, வயதான எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வறண்ட சருமத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது, தோலில் உள்ள கோடுகள் மற்றும் கடினத்தன்மையைக் குறைக்கிறது.
06
ஜோஜோபா எண்ணெய்: ஜோஜோபா எண்ணெய் மிகவும் லேசானது. இது பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். ஜோஜோபா விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இந்த எண்ணெய் சரும துவாரங்களைத் தடுக்காமல் நேரடியாக சருமத் துளைகளுக்குள் சென்று சருமத்தை சரி செய்கிறது. இது சருமத்திற்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி, வறண்ட சருமம் மற்றும் மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் எண்ணெயாக கருதப்படுகிறது.
07
தேங்காய் எண்ணெய்: இது எல்லோர் வீட்டிலும் கிடைக்கும். இது ஒரு சூப்பர் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இந்த எண்ணெய்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றுடன் வைட்டமின் ஈ மற்றும் கே உள்ளது. இவை அனைத்தும் சருமத்தை இளமையாகக் காட்டுகின்றன. மேலும், இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் சரும பிரச்சனைகளை குறைக்கின்றன.
08
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஏ பண்புகள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிஇன்ஃபிளமேட்டரி மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்திருப்பதால், சருமத்தை மென்மையாக வைத்திருப்பதோடு, சரும பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. முகப்பருவை ஏற்படுத்தும் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, சருமத்தை மென்மையாக்குகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வயதான சருமத்தை எதிர்த்துப் போராடி, சருமத்தை முழுமையான ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
09
பாதாம் எண்ணெய்: முகத்திற்கு மற்றொரு சிறந்த மாய்ஸ்சரைசர் பாதாம் எண்ணெய் ஆகும். ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமான வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் எண்ணெய் ஆனது சருமத்தின் எரிச்சலைத் தணிக்கிறது மற்றும் இயற்கையான பளபளப்பை வழங்குகிறது. பாதாம் எண்ணெயின் சில துளிகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு மட்டுமல்லாமல் மென்மையாகவும் மாற்றுகிறது. இது தவிர வயதான அறிகுறிகளை குறைப்பதிலும் பாதாம் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.
- FIRST PUBLISHED : December 19, 2024, 6:50 PM IST
குளிர் காலத்தில் சருமத்தை பொலிவாக்க 7 சிறந்த இயற்கை எண்ணெய்கள்.!
குளிர் காலத்தில் பலரின் சருமம் மிகவும் வறண்டு போகும். அதே சமயம் சிலரது முகம் எண்ணெய் பசையாகவும், மந்தமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் முகத்தை சுத்தம் செய்ய சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், பல சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
MORE
GALLERIES