நடைபயிற்சி, நீச்சல் அல்லது யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டிலேயே எளிமையான ஸ்ட்ரெட்ச்ஸ் பயிற்சிகள் கூட நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும், தசைகளை இறுக்கமடைவதை தடுக்கவும் உதவுகிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 27, 2024, 8:09 PM IST Published by
Vijay Ramanathan
01
குளிர்காலம் குளிர்ச்சியையும் குளிர்ந்த காற்றையும் கொண்டு வருகிறது, இது சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இந்த பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முதுகு வலி. குளிர்ந்த காலநிலையில், தசைகள் கடினமாகி, இரத்த ஓட்டம் குறைகிறது மற்றும் மூட்டுகளில் விறைப்பு அதிகரிக்கிறது, இது முதுகுவலி பிரச்சனையை அதிகரிக்கும். நீங்களும் இந்த பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
02
எளிமையான உடற்பயிற்சி: உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது சர்குலேஷனை மேம்படுத்தவும், ஸ்டிஃப்நெஸ்சை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. எனவே நடைபயிற்சி, நீச்சல் அல்லது யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டிலேயே எளிமையான ஸ்ட்ரெட்ச்ஸ் பயிற்சிகள் கூட நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும், தசைகளை இறுக்கமடைவதை தடுக்கவும் உதவுகிறது.
03
கதகதப்பான ஆடைகளை அணியவும்: கதகதப்பான ஆடைகளை அணிவது உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், ஸ்டிஃப்நெஸ்சை குறைக்கவும் உதவுகிறது. கதகதப்பான ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது தேவைப்படும் போது ஹீட்டிங் பேட்களைப் பயன்படுத்துவதன் மூலமோ முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். ஹீட்டிங் பேட்களைப் பயன்படுத்துவது தசைகளை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கவும் உதவுகிறது.
04
சரியான தோரணையை பராமரிக்கவும்: குளிர்காலத்தில் தவறான தோரணையை முதுகு வலி அதிகரிக்கும், எனவே சரியான நிலையை பராமரிப்பது முக்கியமாகும். அதாவது படுத்திருந்தாலும் சரி, உட்கார்ந்திருந்தாலும் சரி அல்லது நின்றாலும் சரி, முதுகுத்தண்டை நேராக வைக்கவும். உட்கார்ந்திருக்கும் போது உங்கள் முதுகை நேராக வைக்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், சேர்களைப் பயன்படுத்துங்கள். சரியான தோரணை ஆனது உங்கள் முதுகுத்தண்டில் அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் ஸ்டிஃப்நெஸ்சை தடுக்கவும் உதவுகிறது.
05
நீரிழிப்பு : குளிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஆனது நீரிழிப்புக்கு வழிவகுக்கும், இதன் காரணமாக முதுகு வலி மற்றும் அசௌகரியத்தை அதிகரிக்கும். எனவே நிறைய தண்ணீர் குடிப்பது டிஸ்க் மற்றும் ஜாயிண்ட்களை லூப்ரிகேட் செய்வதோடு மட்டுமல்லாமல், வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
06
ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி: மென்மையான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் தசை பதற்றத்தை நீக்கி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. உதாரணமாக, சைல்ட் போஸ், கேட்-கௌவ் ஸ்ட்ரெட்சிங் மற்றும் க்னீ-டூ-செஸ்ட் ஸ்ட்ரெட்சிங் போன்ற உடற்பயிற்சிகள் தசைகளை தளர்த்தவும் மற்றும் வலியைப் போக்கவும் உதவுகிறது.
07
ஹீட்டிங் தெரஃபி: ஹீட்டிங் பேட்கள், சூடான வாட்டர் பாட்டில்கள் அல்லது சூடான குளியல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்டிஃப்நெஸ்சை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், வலியைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஹீட்டிங் பேட்கள் பயன்படுத்தவும்.
08
கோர் பயிற்சிகள்: கோர் பயிற்சிகள் ஆனது உங்கள் முதுகுத்தண்டில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. அதாவது பிளாங்ஸ், பர்டு-டாக் மற்றும் பெல்விக் டில்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பயிற்சிகள் ஆனது முதுகுவலியை குறைக்க உதவுகிறது.
09
திடீர் அசைவுகள் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும் : திடீர் அசைவுகள் ஆனது தசைப்பிடிப்பை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் முதுகுவலியை அதிகரிக்கலாம். எடையை தூக்கும் போது, முதுகெலும்பில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்க உங்கள் முதுகை வளைப்பதை விட உங்கள் கால்களை வளைக்க வேண்டும்.
10
சூடான எண்ணெயைக் கொண்டு மசாஜ்: குளிர் காலத்தில் ஏற்படும் முதுகு வலியைப் போக்க சூடான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும். தினமும் மசாஜ் செய்வது தசை பதற்றத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும் உதவுகிறது. மசாஜ் தெரஃபி ஆனது குளிர்காலத்தில் தசைகளை தளர்த்தி வலியைக் குறைக்க உதவுகிறது.
- FIRST PUBLISHED : December 27, 2024, 5:46 PM IST
குளிர்காலத்தில் முதுகு வலி அதிகமா இருக்கா? இந்த 9 டிப்ஸ் உங்களுக்கு தான்
குளிர்காலம் குளிர்ச்சியையும் குளிர்ந்த காற்றையும் கொண்டு வருகிறது, இது சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இந்த பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முதுகு வலி. குளிர்ந்த காலநிலையில், தசைகள் கடினமாகி, இரத்த ஓட்டம் குறைகிறது மற்றும் மூட்டுகளில் விறைப்பு அதிகரிக்கிறது, இது முதுகுவலி பிரச்சனையை அதிகரிக்கும். நீங்களும் இந்த பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
MORE
GALLERIES