எலுமிச்சையில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் குளிர் நாட்களின் காலை நேரத்தில் லெமன் வாட்டர் பருகுவது பல நன்மைகளை அளிக்கிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 17, 2024, 3:10 PM IST Published by
Sivaranjani E
01
நாம் ஆரோக்கியமாக இருந்தால் குளிர் மாதங்களின் நாட்கள் தினசரி காலை இனிமையாக துவங்கும். அதே சமயம் குளிர் நாட்களின் காலை நேரத்தில் முதல் விஷயமாக வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை (லெமன் வாட்டர்) பருகுவது ஒரு பிரபலமான ட்ரென்டாக உள்ளது. இந்த எளிய மற்றும் பயனுள்ள விஷயம் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. குளிர்காலத்தின் ஒவ்வொரு நாள் காலையிலும் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
02
வைட்டமின் சி நுகர்வை அதிகரிக்க செய்யும்: எலுமிச்சையில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் குளிர் நாட்களின் காலை நேரத்தில் லெமன் வாட்டர் பருகுவது பல நன்மைகளை அளிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாக வைட்டமின் சி உள்ளது. குளிர்காலத்தில், சளி மற்றும் காய்ச்சல் அதிகம் இருக்கும் போது, சூடான எலுமிச்சை நீரை பருகுவது சுவாச நோய் தொற்றுகளின் தீவிரம் மற்றும் அது நீடிக்கும் கால அளவை குறைக்கவும் உதவும். சுருக்கமாக சொன்னால் இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் உங்கள் உடலில் வைட்டமின் சி அளவை அதிகரிக்க ஒரு எளிய வழியாகும்.
03
செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்: எலுமிச்சை ஜூஸின் அசிடிட்டி தன்மையானது செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டுகிறது. குளிர் நாட்களின் காலை நேரத்தில் எழுந்ததும் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமான அமைப்பை சிறப்பாக வைக்கிறது மற்றும் உப்புசம் போன்ற பொதுவான அசௌகரியங்களை தணிக்கிறது. செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
04
உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்: குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காற்று மற்றும் குளிர் வெப்பநிலை ஆகியவை உடலை டிஹைட்ரேஷனாக்கும். எனவே இரவு தூக்கத்திற்கு பிறகு உடலில் இழந்த நீர்ச்சத்தை நிரப்ப காலை நேரத்தில் சூடான எலுமிச்சை நீரை பருகுவது ஒரு சிறந்த வழி. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது உடல் செயல்பாடுகளில் சிரமமின்றி ஈடுபடுவதை உறுதி செய்கிறது, உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கிறத மற்றும் நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்.
05
சரும ஆரோக்கியம்: எலுமிச்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், குறிப்பாக வைட்டமின் சி, ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்து போராடுகிறது. எனவே வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை காலை நேரத்தில் பருகுவதை வழக்கமாக வைப்பது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவி வறட்சியை குறைக்கிறது மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் காலை வழக்கத்தில் இதை சேர்ப்பது இயற்கையான அழகை அதிகரிக்க செய்யும்.
06
எடை மேலாண்மை : காலை உணவுக்கு முன் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், இதன் மூலம் கலோரி நுகர்வை குறைக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் ஃபைபர் திருப்தி உணர்வை ஊக்குவிக்கிறது. எனவே இந்த பானம் குளிர்காலத்தில் எடைசார்ந்த இலக்குகளை நிர்வகிப்பதில் உதவியாக இருக்கும்.
07
ஆற்றலை மேம்படுத்துகிறது: வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் எலுமிச்சையின் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மற்றும் இது தரும் ஹைட்ரேஷன் ஆகியவற்றின் கலவையானது உங்கள் மனநிலையையும் ஆற்றலையும் மேம்படுத்தும். குறிப்பாக எலுமிச்சையின் வாசனை மனநிலையை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.இது உங்கள் நாளை நேர்மறையுடன் துவக்க சிறந்த வழி.
08
மொத்தத்தில் காலை நேரத்தில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை பருகுவது மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த செரிமானம், ஹைட்ரேஷன், சரும ஆரோக்கியம் மற்றும் எடை கட்டுப்பாடு உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது:
- FIRST PUBLISHED : December 17, 2024, 3:10 PM IST
குளிர்காலத்தில் எலுமிச்சை தண்ணீரை வெறும் வயிற்றி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
நாம் ஆரோக்கியமாக இருந்தால் குளிர் மாதங்களின் நாட்கள் தினசரி காலை இனிமையாக துவங்கும். அதே சமயம் குளிர் நாட்களின் காலை நேரத்தில் முதல் விஷயமாக வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை (லெமன் வாட்டர்) பருகுவது ஒரு பிரபலமான ட்ரென்டாக உள்ளது. இந்த எளிய மற்றும் பயனுள்ள விஷயம் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. குளிர்காலத்தின் ஒவ்வொரு நாள் காலையிலும் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
MORE
GALLERIES