குளிர்காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் பானங்கள்!

2 weeks ago 11

Last Updated:January 03, 2025 5:52 PM IST

Health Tips | குளிர்காலத்தில் சூடான கிரீன் டீ ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமானது. இந்த டீ-யில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை நம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் வலிமையை அளிக்கின்றன.

News18

குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மூன்று பானங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

குளிர் சீசனில் காலை எழுந்ததும் பருகும் பானம் நம்மை அந்த நாள் முழுவதும் உற்சாகமாக மாற்றுவதுடன், சிறந்த ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும். பிரபல டாக்டர் ஷிகா சிங் கூறுகையில், லெமன் டீ-யில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க இது மிகவும் நல்லது. இதுதவிர, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. சளி மற்றும் இருமல் அறிகுறிகளையும் குறைக்கிறது. காலை நேரத்தில் ஒரு கப் லெமன் டீ குடிப்பது சளியின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் புத்துணர்ச்சியை இரட்டிப்பாக்குகிறது என்றும் குறிப்பிட்டார்.

எலுமிச்சை இயற்கை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. லெமன் டீயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, குளிர் சீசனில் இந்த பானத்தை தொடர்ந்து அருந்துவது தொற்று மற்றும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நீங்கள் லெமன் டீ மூலம் சிறந்த பலன்களை பெற இஞ்சி மற்றும் தேனையும் சேர்க்கலாம். இது தவிர, வலி ​​மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்தும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

அதேநேரம் குளிர்காலத்தில் சூடான கிரீன் டீ ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமானது. கிரீன் டீ-யின் அற்புதமான நன்மைகளை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். பானம் உடலை உள்ளிருந்து புத்துணர்ச்சியடையச் செய்கிறது. டாக்டர் ஷிகா சிங் கருத்துப்படி கிரீன் டீ செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த டீ-யில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை நம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் வலிமையை அளிக்கின்றன. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினாலும் சரி அல்லது மன அமைதியை விரும்பினாலும் சரி இதற்கு கிரீன் டீயை விட சிறந்த பானம் எதுவுமில்லை. குறிப்பாக குளிர் சீசனில் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு வெப்பம் அளிப்பது மட்டுமின்றி, மனதை புத்துணர்ச்சியோடும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

அதே போல் குளிர்காலத்தில் சூடான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானம் ஒன்றை தேடும் பலரில் நீங்களும் ஒருவர் என்றால் உங்கள் தினசரி வழக்கத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் பானத்தை சேர்க்கலாம். ஆப்பிள் வினிகர் நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி டீடாக்ஸிஃபிகேஷன் செய்வது மட்டுமின்றி, நமது சருமத்தையும் மேம்படுத்துகிறது.

சிறிதளவு தேன் மற்றும் ஆப்பிள் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரை காலை நேரத்தில் பருகுவது செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இந்த பானம் சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக குளிர் சீசனில் இந்த பானத்தை எடுத்து கொள்வது உடலை வெப்பமாக வைப்பது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

First Published :

January 03, 2025 5:52 PM IST

Read Entire Article