Last Updated:December 24, 2024 11:38 AM IST
இந்தப் படத்துக்குப் பின் கிறிஸ்டோபர் நோலன் என்ன படம் இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, புராணக் கதையை கிறிஸ்டோபர் நோலன் இயக்கவிருக்கிறார்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஓப்பன்ஹைமர்’. அணுகுண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்துக்கு 7 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. கிறிஸ்டோபர் நோலனுக்கும் முதல்முறையாக ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்தப் படத்துக்குப் பின் கிறிஸ்டோபர் நோலன் என்ன படம் இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.
அதன்படி, ட்ரோஜன் போருக்குப் பிறகு வீடு திரும்புவதற்கான ஒடிஸியின் போராட்டம் குறித்த ஹோமரின் கிரேக்க காவியமான “தி ஒடிஸி”யை கருப்பொருளாக வைத்து ’தி ஒடிஸி’ என்ற தலைப்பில் புதிய படத்தை கிறிஸ்டோபர் நோலன் தனது 13வது படமாக இயக்க உள்ளார்.
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு மற்றும் அறிவியல் புனைவு சார்ந்த படங்களை இயக்கி வந்த நோலன், தற்போது கிரேக்க காவியத்தை வைத்துப் படத்தை இயக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
December 24, 2024 11:38 AM IST