Last Updated:January 04, 2025 1:53 PM IST
ஆஸி உடனான இந்த தொடரில் ரோகித் சர்மா தொடரில் 5 இன்னிங்சில் 31 ரன்களை மட்டுமே எடுத்தார்.
கிரிக்கெட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. முக்கியமாக கேப்டன் ரோகித் சர்மா மொத்தமாகவே இந்த தொடரில் 5 இன்னிங்சில் 31 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இதனிடையே ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் காரணமாக, இந்த தொடரோடு ரோகித் சர்மா ஓய்வு பெறப் போவதாக தகவல் வெளியானது. இதனை வலுப்படுத்தும் வகையில், 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மா இடம்பெறவில்லை.
இதையும் படிக்க: 3 மணி நேரம் மைதானத்தில் இல்லாத பும்ரா..! மருத்துவமனையில் ஸ்கேன்..! என்ன நடந்தது?
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த போட்டி மிகவும் முக்கியமானது என்பதால், பார்மில் இல்லாத வீரர்களை களம் இறக்கக்கூடாது என்ற முடிவில், தானும் அணியில் இடம்பெறவில்லை என்று கூறினார்.
அதே சமயம், அடுத்த 5 மாதங்களுக்கு பிறகும், தான் நன்றாக விளையாட மாட்டேன் என்ற முடிவுக்கு வர முடியாது என்று தெரிவித்தார். எனவே, தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பதை மைதானத்திற்கு வெளியே லேப்டாப் உடன் அமர்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது என்று ரோகித் சர்மா கூறினார்.
Team first, always! 🇮🇳
📹 EXCLUSIVE: @ImRo45 sets the record straight on his selfless gesture during the SCG Test. Watch his full interview at 12:30 PM only on Cricket Live! #AUSvINDOnStar 👉 5th Test, Day 2 | LIVE NOW | #BorderGavaskarTrophy #ToughestRivalry #RohitSharma pic.twitter.com/uyQjHftg8u
— Star Sports (@StarSportsIndia) January 4, 2025
மேலும் தன் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறிய ரோகித் சர்மா, தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டேன் என உறுதிப்படத் தெரிவித்தார். கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் முடிவில் இந்திய அணி 141 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தடுமாறி வருகிறது.
First Published :
January 04, 2025 1:53 PM IST