கால்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைப்பதால் இத்தனை நன்மைகளா...?

1 month ago 12

Last Updated:December 15, 2024 9:59 PM IST

Foot soak benefits | ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைப்பதால் பல அதிசயங்கள் நிகழும்.

News18

ஒரு கடினமான நாளுக்கு பிறகு உங்களுடைய கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைப்பது எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் இந்த சிறிய விஷயத்தை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்ப்பது உங்கள் உடல் மற்றும் மன நலனுக்கு பல வழிகளில் நன்மை சேர்க்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைப்பதால் பல அதிசயங்கள் நிகழும்.

கூடுதல் ஓய்வுக்கு எப்சம் சால்ட்

உங்களுடைய கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கும்போது, அதில் சிறிதளவு எப்சம் சால்ட் சேர்ப்பது அதற்கான பலனை இன்னும் பல மடங்காக அதிகரிக்கும். மெக்னீசியம் நிறைந்த எப்சம் உப்பு தசைகளை ஓய்வடையச் செய்து, வீக்கத்தை குறைத்து, வலிகளில் இருந்து நிவாரணம் தருகிறது. இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்தால் போதுமானது. மேலும், இது உங்களுடைய சொரசொரப்பான சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.

அத்தியாவசிய எண்ணெய்கள்

வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்ப்பது உங்களுக்கு அரோமாதெரப்பியின் வலிமையைப் பெற்றுத்தரும். லாவண்டர் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தும். புதினா எண்ணெய் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். அதே நேரத்தில் தேயிலை மர எண்ணெய் வீக்கம், பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளதால் உங்களுடைய கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஸ்பா போன்ற அனுபவத்தைப் பெறுவதற்கு உங்களுடைய கால்களை ஊற வைக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்தால் போதுமானது.

சரியான வெப்பநிலை

மேலும், நீங்கள் கால்களை ஊற வைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரின் வெப்பநிலை மிக முக்கியம். அளவுக்கு அதிகமாக சூடாக இருந்தால், அது உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் குளிர்ந்த நிலையில் இருக்கும்போது, நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அதிலிருந்து பெற முடியாது. எனவே கால்களை ஊற வைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் 37 முதல் 40℃ வெப்ப நிலையில் இருந்தால் சிறப்பானதாக இருக்கும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உங்களுக்கு எந்த ஒரு அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் தசைகளை ஆற்றவும் உதவும்.

இதையும் படிக்க: Pumpkin Seeds | சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் முதல் எடை இழப்பு வரை... ஒரு மாதம் பூசணி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைப்பதால் கிடைக்கும் பலன்கள்

  • வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைப்பது கால்கள் மற்றும் கால் விரல்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த நாளங்களை திறக்கும். இது டென்ஷனை குறைத்து, இறுதியில் உங்களுடைய இதய ஆரோக்கியத்திற்கு நன்மையானதாக அமைகிறது.
  • கடினமான வேலைக்குப் பிறகு, உங்களுடைய சோர்வான கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது நேரம் வைப்பது தசைகளை ஆற்றி, இறுக்கமான மூட்டுகளை தளர்த்தி, வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
  • கால்களை தண்ணீரில் ஊற வைப்பது, உங்கள் உடலில் ஓய்வளிக்கும் விளைவை ஏற்படுத்தும்.
  • இது நரம்பு அமைப்பை அமைதிப்படுத்தி, கார்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன் வெளியிடுவதை குறைக்கும்.
  • மேலும், இதில் நீங்கள் அத்தியாவசிய எண்ணெய்களை சேர்க்கும்போது, அது உங்கள் தூக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கும்.
  • ஏற்கனவே பார்த்ததுபோல எப்சம் உப்பு சேர்ப்பது நச்சுக்களை அகற்றி வீக்கத்தை குறைக்கும். இது கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
  • மேலும் தேயிலை மர எண்ணெய் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும். இதனால் உங்கள் கால்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

First Published :

December 15, 2024 9:59 PM IST

Read Entire Article