கார்த்தி நடித்த 'மெய்யழகன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் ‘வா வாத்தியாரே; மற்றும் ’சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கைதி 2’ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், ’கைதி 2’ படத்திற்கு முன்பே அவர் ஒரு படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் பிரபு நடித்த ’டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கியவரும், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான தமிழ் என்பவரின் இயக்கத்தில் தான் கார்த்தி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்தியின் 29வது படமாக அமையும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், கடந்த 60களில் ராமேஸ்வரம் பின்புலத்தைக் கொண்ட ஒரு கதை அம்சம் என்றும், இது முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை முடித்த பின்னர் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கைதி 2 ’ படத்தில் கார்த்தி இணைவார் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் தற்போது ரஜினியின் ’கூலி’ படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ’கைதி 2’ படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.