Last Updated:December 12, 2024 7:40 PM IST
Flower Prices| கார்த்திகை தீப விழா எதிரொலி தஞ்சையில் விலை உயர்ந்த பூக்கள். நாளை பூக்களின் விலை நிலவரம் இதுதான்.
பூக்கள் விலை உயர்வு
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா நாளை (டிசம்பர் 13ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தீப ஒளியால் வீட்டை அழகு படுத்துவதன் மூலம் நம்மில் இருளாக இருக்கும் தீய சக்திகள் விலகி மகா லட்சுமி ஒளியாய் நம் வீட்டில் வாசம் செய்வால் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல், மதுரை, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் கார்த்திகை விழாவிற்காக கோவில் மற்றும் வீடுகளில் வழிபாடு செய்ய பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தஞ்சை பூ மார்க்கெட்டில் பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Also Read: கார்த்திகை தீபத்திருநாள் : உங்கள் உறவினர்களுக்கு பகிர சில வாழ்த்துகள்!
கிலோ ரூ.300 விற்பனையான மல்லி, முல்லை, ரூ.1000-த்திற்கும் கிலோ ரூ. 100க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் ரூ.400-க்கும், சாமிக்கு மாலை கட்ட பயன்படுத்தப்படும் அரளிப்பூ பாக்கெட் ரூ.150க்கு விற்பனையான நிலையில் ரூ.800-க்கும், கிலோ ரூ. 150க்கு விற்பனையான சம்பங்கி பூ ரூ.400-க்கும், கிலோ ரூ.150-க்கு விற்பனையான ரோஸ் 400-க்கும், கிலோ ரூ.50-க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் நாளை மதியம் 12 மணிக்கு மேல் பூக்கள் இதைவிட சற்று அதிகமான விலையில் விற்பனை ஆகும் என பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 12, 2024 7:40 PM IST