காதில் இருக்கும் மெழுகை அகற்றுபவரா நீங்கள்..? மருத்துவர்கள் எச்சரிக்கை

1 month ago 10

Last Updated:December 12, 2024 2:55 PM IST

காதுகளை சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ், சீப்பு, சாவி, ஹேர்பின்கள் அல்லது பென்சில்கள் போன்ற கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது உங்களுக்கு திருப்தியை தரலாம். ஆனால், அது உங்கள் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News18

காட்டன் பட்ஸ் மற்றும் பிற கருவிகளின் மூலம் காதில் இருக்கும் மெழுகுகளை அழுத்துவது காதுகளுக்கு தீங்கை விளைவிக்கும். இதனால் அடைப்புகள், தொற்றுகள் அல்லது செவிப்பறை சேதம் ஏற்படலாம். அதே நேரத்தில், காது மெழுகு இயற்கையான பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு உதவுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காதுகளை சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ், சீப்பு, சாவி, ஹேர்பின்கள் அல்லது பென்சில்கள் போன்ற கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது உங்களுக்கு திருப்தியை தரலாம். ஆனால், அது உங்கள் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காட்டன் பட்ஸை வைத்து, காதினுள் இருக்கும் மெழுகை திறம்பட அகற்ற முடியாது. அதற்கு பதிலாக, அவை அதனை காதினுள் ஆழமாக தள்ளுகின்றன. இது அடைப்புகள், அசௌகரியம் அல்லது செவிப்பறை சேதத்திற்கு வழிவகுக்கும். டூத் பிக்குகள் அல்லது ஸ்ட்ராக்கள் போன்ற பிற கருவிகளும் இதே போன்ற அபாயங்களையே கொண்டுள்ளன. மேலும், அவை தற்செயலாக செவிப்பறையைத் துளைத்தால் நீடித்த வலி, தொற்று அல்லது செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலான மக்கள், காதுகளை சுத்தம் செய்யவே தேவையில்லை என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள். பாதுகாப்பு செயல்பாடுகளில் காது மெழுகு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக நமது உடலானது, இயற்கையாகவே காதுகளை சுத்தம் செய்யும் பண்புடையவை மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பாதுகாப்பையும் வழங்குகிறது.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஓட்டோலரிஞ்ஜாலஜியின் கூற்றுப்படி, குறிப்பிட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் வரை காது மெழுகை அதன்போக்கில் விட்டுவிடுவது நல்லது. பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, காதில் இருக்கும் அழுக்கு போன்ற மெழுகு சுத்தமின்மையை குறிக்கவில்லை, காதுகள் எவ்வாறு தூசியைப் பிடிக்கின்றன மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் நுழைவதைத் தடுக்கின்றன என்பதே இதன் இயல்பான பகுதியாகும்.

காதுகளை சுத்தம் செய்வது ஆரோக்கியமாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதிகப்படியான சுத்தம் செய்யும் முயற்சிகள் உங்கள் காதுகளுக்கு சிக்கல்களை உருவாக்கலாம். உதாரணமாக, காது மெழுகு காது துவாரத்தின் வழியில் ஆழமாகத் தள்ளப்பட்டால், அது கடினமாகி சிக்கிக் கொள்ளும், மேலும் மருத்துவரை நாட வேண்டிய அவசியத்திற்கும் உங்களை தள்ளலாம்.

இதையும் படிக்க: அதிக புரோட்டீன் நிறைந்த 10 சைவ உணவுகள்... என்னென்ன தெரிஞ்சுக்கலாம்... 

நோய்த்தொற்றுகள் அல்லது சுத்தம் செய்வதில் முறையற்ற முயற்சிகளை மேற்கொள்தல் போன்ற பிரச்சினைகளுக்கு ஈஎன்டி (ENT) நிபுணர்கள் அடிக்கடி சிகிச்சை அளிக்கின்றனர். வீட்டிலேயே காது மெழுகை அகற்றும் சாதனங்கள் கூட இதுபோன்ற சிக்கலை மோசமாக்கலாம். மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் இந்தக் கருவிகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இந்த மெழுகு காது துவாரத்தில் மேலும் உள்ளே தள்ளப்படலாம் அல்லது மென்மையான காது தோலில் காயத்தையோ, சேதத்தையோ ஏற்படுத்தலாம் என்கின்றனர்.

குளித்தபின் காதில் தண்ணீர் தேங்கினால், வெளிப்புற காதை ஒரு துண்டு கொண்டு துடைத்தாலே போதும். இருப்பினும், காதில் வலி, காது கேளாமை அல்லது அசாதாரண அழுக்கு வெளியேற்றம் உள்ளவர்கள் மருத்துவரை சந்திப்பது அவசியம். காது நோய்த்தொற்றுகள் அல்லது அறுவை சிகிச்சைகளின் வரலாற்றைக் கொண்டவர்கள், காது சுத்தம் செய்யும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம்.

First Published :

December 12, 2024 2:55 PM IST

Read Entire Article