‘காதல் கோட்டை’ பட இயக்குனர் அகத்தியனை நெகிழச் செய்த நடிகை தேவயானி

3 weeks ago 27

Last Updated:January 01, 2025 4:26 PM IST

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் புதிய ரெஸ்டாரென்டை திறந்து வைக்க ‘காதல் கோட்டை’ படத்தில் பிரபலமான நடிகை தேவயானி இன்று (ஜன.1) வருகை தந்தார்.

News18

நடிகை தேவயானி ‘காதல் கோட்டை’ படத்தின் இயக்குநரின் பூர்வீக வீட்டுக்கு நேரடியாக சென்று அவரது சகோதரியை நேரில் நலம் விசாரித்த நிகழ்வால் இயக்குநர் அகத்தியன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் புதிய ரெஸ்டாரென்டை திறந்து வைக்க ‘காதல் கோட்டை’ படத்தில் பிரபலமான நடிகை தேவயானி இன்று (ஜன.1) வருகை தந்தார். முன்னதாக புதிய ரெஸ்டாரென்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தன்னை சினிமாவில் பிரபலம் அடைய வைத்த திரைப்படமான ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி என்பதை அறிந்த தேவயானி, அங்கிருந்தவர்களிடம் விசாரித்து அவரது பூர்வீக வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டில் வசித்து வரும் அகத்தியனின் சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையில் வசித்து வரும் இயக்குநர் அகத்தியன், தேவயானியின் இந்த செயலை அறிந்து நெகிழ்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகத்தியனிடம் கேட்டபோது, “சினிமாவில் நன்றி மறவாத நடிகைகளில் தேவயானியும் ஒருவர். அவர் என்னுடைய மகள் போன்றவர்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

First Published :

January 01, 2025 4:26 PM IST

Read Entire Article