காணும் பொங்கல் பற்றி சில வரிகள்.!

2 weeks ago 14

10 Lines About Kaanum Pongal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காணும் பொங்கல் பற்றிய 10 வரிகள் பற்றி கொடுத்துள்ளோம். காணும் பொங்கல் என்று சொல்வதை விட கன்னி பொங்கல் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். காணும் பொங்கலை பெரும்பாலும் கன்னி பொங்கல் என்று தான் கூறுவார்கள். கன்னி பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையில் நான்காவது நாளாக கொண்டாடப்படும் விழா ஆகும்.

இந்நாளில், கிராப்புறங்களில் மஞ்சள் தண்ணி விளையாட்டு விளையாடுவார்கள். பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல், இசை நாற்காலி, கோலப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். கன்னி பொங்கல் அன்று உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

காணும் பொங்கல் பற்றி சில வரிகள்:

காணும் பொங்கல் பற்றி சில வரிகள்

  1. காணும் பொங்கல் என்பது, பொங்கல் பண்டிகையில் நான்காவது நாள் கொண்டாடப்படும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னி பொங்கல், கணுப் பண்டிகை என்றும் கூறுவார்கள்.
  2. காணும் பொங்கல் அன்று, உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள்.
  3. இந்நாளில், கிராமப்புறங்களில் பல்வேறு வேடிக்கை விளையாட்டுகள் நடைபெறும். பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல், இசை நாற்காலி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக உறி அடித்தல் நிகழ்ச்சி அணைத்து ஊர்களிலும் மிகவும் விமர்சியாக நடைபெறும்.
  4. கன்னி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் அனைவரும் பாரம்பரிய முறையில் புடவை அணிந்து, அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
  5. இந்நாளின் சிறப்பே கணுப்பிடி தான். இது சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு ஆகும். சகோதரர்கள் நலமுடனும், வளமுடன் வாழ வேண்டும் என்று சகோதரிகள் வேண்டி கொள்வது ஆகும்.
  6. கணுப்பிடி வைக்கும் போது, “காக்காப்பிடி வச்சேன்… கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்,” என்று சொல்லி படையலிட்டு. அண்ணன், தம்பி நலம் பெற பிராத்தனை செய்வார்கள்.
  7. கன்னிப் பெண்கள் அனைவரும் ஊரில் ஒரு இடத்தில் கூடி, ஆடிப்பாடி மகிழ்வார்கள். நம்முடைய கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதுடன், பெரியவர்களின் ஆசிகளை பெறுவதற்காக உண்டாக்கப்பட்டதே காணும் பொங்கல் திருநாளாகும்.
  8. கண்டு மகிழ்ந்து, ஆசி பெரும் பொங்கல் திருநாள் என்பதால் இதற்க்கு காணும் பொங்கல் என்று பெயர் வந்தது.
  9. காணும் பொங்கல் அன்று, நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து, குலதெய்வத்திற்கு படைத்து, விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்றும், தடைகள் விலக வேண்டும் என்றும் வேண்டி கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் காலில் விழுந்து அவர்களின் ஆசி பெற வேண்டும்.
  10. இந்த நாளில் பலரும் பல விதமான உணவு வகைகள், பலகாரங்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, குடும்பமாக ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று, உல்லாசமாகவும் உற்சாகமாகவும் பொழுதை கழித்து விட்டு வருவார்கள்.

காணும் பொங்கல் பாடல்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Read Entire Article