வெல்லம் என்பது இந்திய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக அமைகிறது. பாரம்பரிய இனிப்புகள் செய்வதற்கும் செல்வ வளம் மற்றும் தூய்மையின் அடையாளமாகவும் இது கருதப்படுகிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 31, 2024, 11:44 AM IST Published by
Sivaranjani E
01
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பான வெல்லம் தனித்துவமான சுவையையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு சில வெல்லத்தில் கெமிக்கல்கள், செயற்கை நிறங்கள் அல்லது தூசுகள் சேர்த்து கலப்படம் செய்யப்பட்டு, தரம் குறைந்த வெல்லம் விற்பனை செய்யப்படுவதோடு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
02
வெல்லம் என்பது இந்திய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக அமைகிறது. பாரம்பரிய இனிப்புகள் செய்வதற்கும் செல்வ வளம் மற்றும் தூய்மையின் அடையாளமாகவும் இது கருதப்படுகிறது. பொங்கல் அன்று பச்சரிசியோடு வெல்லம் மற்றும் நெய் சேர்த்து சமைத்து சூரிய பகவானுக்கு வழிபடுவது வழக்கம். அதேபோல தீபாவளி பண்டிகையில் வெல்லமானது லட்டு, சுசியம், அதிரசம் மற்றும் பல்வேறு இனிப்புகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட வெல்லம் வாங்கும்போது கலப்படமான வெல்லத்தை பயன்படுத்தினால் அது எப்படி நன்றாக இருக்கும்? எனவே மார்க்கெட்டில் இருந்து வெல்லம் வாங்கும்போது அது கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கான குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
03
செயற்கை நிறம் : சுத்தமான வெல்லம் இயற்கையான பழுப்பு நிறத்தில் அல்லது தங்கம் கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அளவுக்கு அதிகமாக பளிச்சென்று இருந்தாலோ அல்லது பளபளப்பாக இருந்தாலோ அதில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு சிறு துண்டு வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அந்த கரைசலை பார்க்கும்போது அதில் ஏதேனும் நிறமாற்றம் இருந்தால் அது செயற்கை நிறத்தை குறிக்கிறது. சுத்தமான வெல்லம் எந்த ஒரு செயற்கை நிறத்தையும் வெளியிடாமல் தண்ணீரில் கரையும்.
04
சாக் பவுடர் போன்ற கலப்பட பொருட்கள் : ஒரு சில சமயங்களில் வெல்லத்தின் எடையை அதிகரிப்பதற்காக அதில் சாக் பவுடர் அல்லது வாஷிங் சோடா போன்ற கலப்பட பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதற்கு நீங்கள் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்த பிறகு டம்ளரின் அடியில் ஏதேனும் கசடுகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். சுத்தமான வெல்லத்தில் இந்த மாதிரியான எந்த ஒரு கசடுகளும் இருக்காது.
05
வெல்லத்தின் அமைப்பு : பொதுவாக வெல்லத்தை உங்களுடைய கைகளால் உடைக்க முடிய வேண்டும். சுத்தமான வெல்லம் மென்மையாகவும், உடைப்பதற்கு மிகவும் எளிதாகவும், லேசான பிசுபிசுப்பு தன்மையோடும் இருக்கும். இதுவே கலப்படம் நிறைந்த வெல்லம் அளவுக்கு அதிகமாக கடினமாக இருக்கலாம். வெல்லம் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதில் சல்பர் காம்பவுண்டுகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதற்கு வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்க வேண்டும். இப்போது இந்த தண்ணீரில் முட்டை அல்லது நுரை பொங்குகிறதா என்பதை கவனியுங்கள். அப்படி இருந்தால் அது சல்ஃபர் காம்பவுண்டுகள் இருப்பதற்கான அறிகுறி.
06
சுவைத்து பாருங்கள் வெல்லத்தின் இயற்கையான சுவையும், வாசனையும் அதன் தூய்மைக்கான முக்கியமான குறிகாட்டிகள். இதற்கு நீங்கள் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை எடுத்து சாப்பிட்டு பார்க்கலாம். வித்தியாசமான சுவையோ அல்லது கெமிக்கல் வாசனையும் இருந்தால் அதில் கலப்படம் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
07
வெல்லத்தின் கரையும் தன்மை : கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கலாம். இது அதனுடைய கரையும் பண்புகளை பாதிக்கும். இதற்கு நீங்கள் ஒரு பாத்திரத்தில் சிறு துண்டு வெல்லத்தை சூடாக்க வேண்டும். அது எப்படி உருகுகிறது என்பதை கவனியுங்கள். சுத்தமான வெல்லம் சீராக உருகும் மற்றும் தனித்தனியாக பிரியாமல் ஒரு தடினமான திரவத்தை உருவாக்கும்.
08
மினரல் ஆயில் சோதனை வெல்லதிற்கு ஒரு பளபளப்பை சேர்ப்பதற்காக சில சமயங்களில் அதில் மினரல் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நீங்கள் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை உங்கள் விரல்களில் வைத்து தேய்க்க வேண்டும். பிசுபிசுப்பான தன்மை அல்லது எண்ணெய் கசடு விரல்களில் இருப்பதை நீங்கள் கவனித்தால் அது மினரல் ஆயில் இருப்பதற்கான நிச்சயமான ஒரு அறிகுறி.
- FIRST PUBLISHED : December 31, 2024, 11:42 AM IST
கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை எப்படி கண்டறிவது..? இந்த 6 வழிகளை தெரிஞ்சுக்கோங்க.!
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பான வெல்லம் தனித்துவமான சுவையையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒரு சில வெல்லத்தில் கெமிக்கல்கள், செயற்கை நிறங்கள் அல்லது தூசுகள் சேர்த்து கலப்படம் செய்யப்பட்டு, தரம் குறைந்த வெல்லம் விற்பனை செய்யப்படுவதோடு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
MORE
GALLERIES