கருவுறாமை பிரச்சனையைப் போக்க உதவும் கருவுறுதல் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டுள்ளவர்களின் முயற்சியிலும் கூட காற்றின் தரம் மோசமாக இருப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த சூழலில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மற்றும் எதிர்காலத்திற்காக மாசுபாட்டை கையாள்வதற்கான சவாலை அவசர தேவையாகவே நாம் பார்க்க வேண்டும்.
பொதுவாக சல்ஃபர் டை ஆக்சைட், நைட்ரஜன் டை ஆக்சைட், கார்பன் மோனாக்சைட் மற்றும் வெறும் கண்களுக்குத் தெரியாத துகள்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இருந்தால், அந்த காற்று மாசுபட்டது ஆகும். அதேபோல், ஒரு மைக்ரான் விட்டம் அல்லது அதற்கும் குறைவான மற்ற விஷ வாயுக்களுடன் கூடிய மாசுபடுத்திகளும் உள்ளன. இவை, மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். மேலும், இவை பாலின பாகுபாடின்றி ஆண் மற்றும் பெண்களில் கருவுறுதல் விஷயத்தில் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும்.
ஆண் கருவுறுதலில் மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கம்:
மாசுக்கள் குறிப்பாக காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள், ஆண்களின் கருவுறுதலில் மிக முக்கியமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட காலம் மாசுக்கள் நிறைந்த காற்று இருக்குமிடம் அல்லது பகுதிகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணு தரம் குறையக்கூடிய அபாயம் இருக்கிறது. மேலும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையலாம் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும்.
தூய்மையான பகுதிகளில் வசிக்கும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, நீண்ட காலமாக மாசு நிறைந்த சூழலில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் செறிவு மற்றும் இயக்க விகிதம் (motility rate) 15% முதல் 30%வரை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தவிர குரோமோசோமல் அசாதாரணங்கள், பலவீனமான விந்துக்கள் உருவாவது, விந்தணுவின் உருவ அமைப்பில் அசாதாரண நிலை மற்றும் விந்தணுவின் இயக்கம் குறைதல் போன்றவையும் மாசுக்கள் தொடர்புடைய பிற அபாயங்களாக உள்ளன.
பெண் கருவுறுதலில் மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கம்:
சுற்றுச்சூழலில் அதிக அளவு மாசுபாடு இருந்தால், ஆண்களைப் போலவே பெண்களும் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அபாயங்கள் உள்ளன. BPA மற்றும் phthalates போன்ற தொழில்துறை ரசாயனங்கள் நீண்ட காலமாக வெளிப்படுவதை ஆய்வுகள் காட்டுகின்றன. இது அன்ஓவுலேஷன் (அண்டவிடுப்பின் குறைபாடு) மற்றும் oocyte-ன் தரம் குறைந்துள்ள நிகழ்வுகளையும் வெளிப்படுத்தி உள்ளது. IVF சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களை, எதிர்மறை தூய்மையான பகுதிகளில் வாழும் பெண்களுடன் ஒப்பிடுகையில், அதிக மாசுபட்ட பகுதிகளில் உள்ள பெண்களில் கர்ப்பம் தரிக்கும் செயல்முறையின்போது நிகழும் இம்ப்ளேன்டேஷன் மற்றும் கருத்தரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் 10-20% குறைந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிக்க: குளிர்காலத்தில் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் டாப் 10 உணவுகள்..!
IVF வெற்றி விகிதம்:
IVF போன்ற அசிஸ்டட் ரீப்ரொடக்ட்டிவ் டெக்னாலஜியிலும் மாசுபாடு சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதை தரவுகள் பிரதிபலிக்கின்றன. அதிக மாசு நிறைந்த பகுதிகளில் செய்யப்படும் IVF சிகிச்சைகளின் வெற்றி விகிதங்கள் 8% -15% வரை குறைவான பிறப்பு விகிதம் மற்றும் சைக்கிள் கேன்சலேஷன் ரேட்ஸை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தை வேண்டும் என்ற கனவோடு இருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான தம்பதிகளின் ஆசையை மாசுக்கள் பாதிக்க செய்வதை இது போன்ற தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
நிலைமை இப்படி இருக்க கருவுறுதல் சிகிச்சை அட்டவணையில் நோயாளிகளிடையே மாசு சூழலில் வசிப்பதன் வெளிப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு நிலையான விதிமுறையாக கையாளப்பட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல சுற்றுச்சூழல் நச்சுக்களிலிருந்து gametes மற்றும் கருக்களைப் பாதுகாப்பதற்காக IVF வளாகத்திற்குள் காற்றின் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: சியா விதைகளை உடனடியாக ஆக்டிவேட் செய்ய கூடிய 8 பானங்கள்..!
இனப்பெருக்க ஆரோக்கியத்தில் மாசுபாடு ஏற்படுத்தும் மோசமான விளைவுகளுக்கான சான்றுகள் அதிகரித்துள்ளன என்றாலும் பல்வேறு மாசுபடுத்திகள் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை புரிந்து கொள்ள இன்னும் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும் கருவுறுதலில் மாசுபாட்டின் விளைவு, தற்போது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்சனை என்பதை முந்தைய ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆராய்ச்சி, மருத்துவ நடைமுறை உள்ளிட்ட பல அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே கருவுறுதலுக்கு எதிராக அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தலை தடுக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
First Published :
January 07, 2025 2:43 PM IST