Last Updated:December 30, 2024 10:37 AM IST
மதுரையில் இன்று கிராம் தங்கம் 15 உயர்ந்து ரூ.7150 க்கும், ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும். இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றைய (டிசம்பர் 30) தங்கத்தின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7135 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 57,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் கிராமுக்கு 15 உயர்ந்து ரூ.7150 க்கும், ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.5895 க்கும், சவரன் ரூ.47,160 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5905 க்கும், ஒரு சவரன் ரூ.47,240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.80 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.9,980 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Madurai,Madurai,Tamil Nadu
First Published :
December 30, 2024 10:37 AM IST
ஓங்கி அடிக்கும் தங்கத்தின் விலை... ஒரு கிராம் இவ்வளவா ? அதிர்ச்சியில் பொதுமக்கள்