ஒளிரும் மற்றும் இளமையான சருமத்தை பெற ஆளிவிதை ஃபேஸ் பேக்...

1 week ago 16

Last Updated:January 07, 2025 6:19 PM IST

Benefits of Flaxseed | ஆளி விதைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய சில பேக்குகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்...

News18

ஆளி விதையானது தோல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிறியதாக தோன்றினாலும், ஆளி விதைகளின் நன்மைகள் மிகப்பெரியவை. ஆளி விதைகளில் பல ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆளி விதையில் சக்திவாய்ந்த ஆன்டிஇன்ஃபிளமேட்டரி மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆளிவிதை உலர்ந்த சருமத்தை நீக்கி, சருமத்தின் மென்மையை அதிகரிக்கும்.

ஆளி விதையில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் வறண்ட சருமத்தை போக்க உதவும். ஆளி விதையை தோலில் தொடர்ந்து பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் குறையும். இதில் உள்ள ஒமேகா -3 ஃபாட்டி ஆசிட்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஹைட்ரேட் செய்து, உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றும். மேலும், ஆளி விதையின் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி முகப்பரு, சிவத்தல் மற்றும் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. ஆளி விதைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய சில பேக்குகள் பற்றி பார்ப்போம்.

ஆளி விதை ஃபேஸ் பேக்குகள்:

ஆளி விதை மற்றும் தேன்:

1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்து அரைத்த ஆளி விதையில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர், இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பின் 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும்.

ஆளி விதை மற்றும் ஓட்ஸ்:

1 டேபிள் ஸ்பூன் அரைத்த ஆளி விதையில் 2 டீஸ்பூன் ஓட்மீல் சேர்த்து வெதுவெதுப்பான நீர் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர் இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை, மென்மையாக்கும்.

ஆளி விதை, ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்:

1 டேபிள் ஸ்பூன் அரைத்த ஆளி விதையில் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர் இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 25 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இந்த ஃபேஸ்பேக் உங்கள் முகத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குகிறது.

ஆளி விதை, கிரீன் டீ மற்றும் தேன்:

1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த கிரீன் டீ உடன் 1 டேபிள் ஸ்பூன் அரைத்த ஆளிவிதை மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர் இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் உங்கள் சருமத்தை அமைதியாக்கவும் மற்றும் பிரகாசமாக்கவும் உதவுகிறது.

ஆளி விதை, மஞ்சள் தூள் மற்றும் தேன்:

1 டேபிள் ஸ்பூன் அரைத்த ஆளி விதை, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர், இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் உங்கள் முகத்தை சூடான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது மற்றும் இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

First Published :

January 07, 2025 6:19 PM IST

Read Entire Article