OTT Spot |எங்கேயும் படத்தில் ரிப்பீட்டட் காட்சிகளை பார்க்க முடியாது. அதனாலேயே படம் போரடிக்காமல் என்கேஜிங்காக நகர்கிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 7, 2025, 5:53 PM IST Published by
Khalilullah S
01
2 மணி நேரம் தான். பெரும்பாலும் போரடிக்காமல் நகர வேண்டும். குறிப்பாக திகில் உணர்வை ஏற்படுத்தி அடுத்த என்ன என்ற சுவாரஸ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கான படம் தான் இது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. இந்தப் படத்தில் பயம் என்ற உணர்வே ஒரு மொழியாக இருப்பதால், மொழி ஒரு தடையில்லை.
02
அப்படியொரு ‘சூப்பர் நேச்சுரல்’ ஹாரர் படம் தான் ‘ஷைத்தான்’ (Shaitaan). குஜராத்தியில் வெளியான ‘வஷ்’ படத்தின் தழுவலாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் கதை மிகவும் சிம்பிள். குடும்பத்தின் மீது பேரன்பு கொண்ட கபீர் ரிஷி (அஜய் தேவ்கன்) தனது மனைவி ஜோதி (ஜோதிகா), மகள் ஜான்வி (ஜான்கி போடிவாலா) மகன் துருவ் (அங்கத் ராஜ்) ஆகியோருடன் ஓய்வுக்காக தனது பண்ணை வீட்டுக்குச் செல்கிறார்.
03
காரில் பயணம் மேற்கொள்ளும் அவர்கள், வழியில் ‘தாபா’ ஒன்றில் சாப்பிட வண்டியை நிறுத்துகின்றனர். அங்கே வனராஜ் (மாதவன்) என்பவர் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி புரிந்து, நட்பாகிறார். அந்த கேப்பில் அவர் கொடுக்கும் இனிப்பை சாப்பிடும் ஜான்வி முழுமையாக வனராஜின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறார்.
04
விடாது துரத்தும் கருப்பாக, பண்ணைவீட்டுக்கும் வரும் வனராஜ், ஜான்வியை ஆட்டிப்படைப்பது மட்டுமல்லாமல், அவரை தனக்கு தத்துக்கொடுக்கும்படி கேட்கிறார். இது பெற்றோர்களுக்கு பேரிடியாக இறங்குகிறது. பெற்றோருக்கும், வனராஜுக்கும் இடையிலான போராட்டத்தில் ஜான்வி மீட்கப்பட்டாரா? பறிக்கப்பட்டாரா? வனராஜின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.
05
படம் தொடங்கும்போது என்னவோ ஜாலியாகத்தான் தொடங்குகிறது. ஆனால், கதை நகர நகர எதிர்பாராத சம்பவங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. குறிப்பாக மாதவன் என்ட்ரி கொடுக்கும்போதே ஏதோ சம்பவம் இருக்கிறது என்பது புரிகிறது. ஒரே வீடு, ஐந்தே கதாபாத்திரங்கள், 2 மணி நேரம் அதற்குள் நடக்கும் சம்பவங்கள், களேபரங்கள் அதிர வைக்கின்றன.
06
எங்கேயும் படத்தில் ரிப்பீட்டட் காட்சிகளை பார்க்க முடியாது. அதனாலேயே படம் போரடிக்காமல் என்கேஜிங்காக நகர்கிறது. 4 பேரையும், மாதவன் ஆட்டிப்படைக்கும் விதம் அட்டகாசம். விறுவிறுப்பான திரைக்கதையை நம்பி, அயற்சியில்லாமலும் நகர்த்தியிருப்பது படத்துக்கு ப்ளஸ். மாதவனின் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டி, அதை நோக்கியே நகர வைப்பதும், என்ன தான் காரணம் என்ற ஆவலை தூண்டுவதும் சிறப்பு.
07
உருவகேலிக்கு எதிரான வசனத்தை சிறுவன் பேசுவது, அறிவியலைக் கொண்டு அமானுஷ்யத்தை அணுகுவது பாராட்டத்தக்கது. சாக்லேட் பாயாக நடித்த மாதவன், அப்படியே மாறி, மிரட்டுகிறார். அவர் மீது அப்படியொரு கோபத்தை ஏற்படுத்தும் வில்லன் கதாபாத்திரத்துக்கு அவர் நேர்த்தியான தேர்வு. ஓவர் ஆக்டிங் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார்.
08
தந்தையாக அஜய் தேவ்கனின் தவிப்பும், அழுதுகொண்டேயிருக்காமல் ஆக்ஷனில் இறங்கும் ஜோதிகா ‘தாயை விட வலிமையான சக்தி எதுவுமில்ல’ என்பதை நிரூபிக்கும் இடமும் கவனம் பெறுகிறது. இவர்களின் மகளாக நடித்துள்ள ஜான்கி மிரட்டியிருக்கிறார். பின்னணி இசையும், ஒலிக்கோர்வையும், ஹாரர் படத்துக்கான உணர்வுகளை கோர்த்து உயிரூட்டுகிறது. லாஜிக் தேவையில்லை திரைக்கதையின் மேஜிக் போதும் என்பவர்களுக்கு இந்தப் படம் வொர்க் ஆகலாம்.
- FIRST PUBLISHED : January 7, 2025, 5:53 PM IST
OTT Spot | ஒரே வீடு… 5 பேர்… நொடிக்கு நொடி விறுவிறுப்பு… இந்த ஹாரர் படத்தை பார்த்திருக்கீங்களா?
2 மணி நேரம் தான். பெரும்பாலும் போரடிக்காமல் நகர வேண்டும். குறிப்பாக திகில் உணர்வை ஏற்படுத்தி அடுத்த என்ன என்ற சுவாரஸ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கான படம் தான் இது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. இந்தப் படத்தில் பயம் என்ற உணர்வே ஒரு மொழியாக இருப்பதால், மொழி ஒரு தடையில்லை.
MORE
GALLERIES