Updated: Tuesday, January 7, 2025, 14:07 [IST]
இந்தியாவில் திடீரென எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, நிறுவனங்கள் அதிகபட்ச தள்ளுபடி தருவது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் புதிதாக வாங்கப்படும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வரையிலும், கார்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைக்கிறது.
XUV400 EV எலக்ட்ரிக் காருக்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறதாம். ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் Vida V1 Pro இருசக்கர வாகனத்திற்கு 25,000 ரூபாய் வரையிலும், Vida V1 Plus இருசக்கர வாகனத்திற்கு 10,000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. Nexon EV காருக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், Punch EV காருக்கு 1.2 லட்சம் ரூபாய் வரையும், Tiago EV காருக்கு 40,000 ரூபாய் வரையும் தள்ளுபடி கிடைக்கிறது.
ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ காமர்ஸ் தலங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் 2500 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏதர் நிறுவனம் தன்னுடைய Rizta மாடல் இருசக்கர வாகனங்களுக்கு 3,000 - 6700 வரையிலும், 450 மாடலுக்கு 5000- 6000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைக்கிறது.
மலிவு விலையில் வீடு வேண்டுமா? ஏலம் விடப்படும் சொத்துக்களை ஒரே போர்ட்டலில் வழங்கும் பாங்க்நெட்!
திடீரென எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் வாகனத்தை உற்பத்தி செய்து வைத்திருப்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
அதே போல எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான பாகங்களின் விலை குறைந்தது மற்றும் அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய சிஏஎஃப்ஈ (Corporate Average Fuel Efficiency - CAFE) தர நிர்ணய விதிமுறைகள் ஆகியவையும் காரணமாக கூறப்படுகிறது.
பண்டிகை காலங்களில் வாகன விற்பனையை ஊக்குவிக்க நிறுவனங்கள் அதிகபட்ச தள்ளுபடி வழங்கும், அந்த வகையில் தான் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் அதிக தள்ளுபடிகளை வழங்குகின்றன என ஐசிஆர்ஏ அமைப்பின் தலைவர் ஸ்ரீகுமார் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். தங்களிடம் கூடுதலாக இருக்கும் வாகனங்களை விற்பனை செய்வதற்காக நிறுவனங்கள் இவ்வாறு அதிகபட்ச தள்ளுபடிகளை அறிவிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தங்கத்தில் முதலீடு செய்வது இனி வேஸ்ட்.. கோல்ட்மேன் சாக்ஸ் சொல்வது என்ன தெரியுமா..?
இதனிடையே இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாக எலக்ட்ரிக் வாகன சந்தை மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் இந்த சந்தை 5.5 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருசக்கர எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை 25 சதவீதமும் கார்கள் சந்தை 15 சதவீதமும் உயரும் என கணிக்கப்படுகிறது.
Story written by: Devika
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Why EV cars price reduced by upto 3 lakhs rs?
Electric vehicle prices are dropping as cars price reduced by up to Rs 3 lakh and two-wheelers by 10-20%.