எமகாதகி படத்தில் அமானுஷ்யம்!

2 weeks ago 10

Last Updated : 04 Jan, 2025 08:55 AM

Published : 04 Jan 2025 08:55 AM
Last Updated : 04 Jan 2025 08:55 AM

<?php // } ?>

ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா என பலர் நடித்துள்ள படம், ‘எமகாதகி’. இந்தப் படத்துக்கு சுஜித் சாரங்க் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார். ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கணபதி ரெட்டி இணை தயாரிப்பு செய்துள்ளார்.

படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கூறும்போது, “இது இறப்பு வீட்டில் நடக்கும் கதையை கொண்ட படம். கிராமம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் உடல் அந்த வீட்டை விட்டுப் போக மறுக்கிறது. அது ஏன், எப்படி என்பது கதை. என் கிராமத்தில் நடந்த விஷயங்களை வைத்து இதன் திரைக்கதையை அமைத்துள்ளேன்.

இயற்கைக்கு அப்பாற்பட்டு நடக்கும் அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசும். ஆண்களைத் திட்டுவதற்கு ‘எமகாதகன்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். பிடிவாதமாக இருக்கிற பெண்களை ‘எமகாதகி’ என்று சொல்வார்கள். உயிர் போன பின்பும் வீட்டை விட்டு வெளியேற மறுக்கிற பெண் ணின் கதை என்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளேன். வழக்கமான கதையில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும். அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article