Last Updated:January 07, 2025 2:03 PM IST
குளிர்காலத்தில் உங்களது உடல் நெகிழ்வுத்தன்மையை இழப்பது, உடல் செயல்பாடுகள் குறைவது, கடுமையான குளிர் காலநிலை போன்றவை உங்களது இரத்த ஓட்டத்தை குறைக்கலாம்.
முழங்கால் வலி என்பது பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை, குறிப்பாக பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் பெரும்பாலானோர் மூட்டுவலி மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படுகின்றனர்.
அதற்கான முக்கிய காரணங்களில் சில, குளிர்காலத்தில் உங்களது உடல் நெகிழ்வுத்தன்மையை இழப்பது, உடல் செயல்பாடுகள் குறைவது, கடுமையான குளிர் காலநிலை போன்றவை உங்களது இரத்த ஓட்டத்தை குறைக்கலாம் மற்றும் காற்றில் ஏற்படும் அழுத்தம் உங்கள் உடல்நலனில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி உடல் திசுக்களை பாதிக்கலாம், இதுவே முழங்கால் அல்லது மூட்டில் வலி அதிகரிக்க காரணமாகிறது.
அதுமட்டுமின்றி, வயது பிரச்சனையும் மூட்டு வலிக்கு முக்கிய காரணமாகும். வயதான நேரத்தில் உடல் வலிமையை இழக்கிறது மற்றும் தசைகள் முதிர்ச்சியடைகின்றன. இது சர்கோபீனியா என்று அழைக்கப்படுகிறது. எலும்பு தசைகளின் இயற்கையான சிதைவு மற்றும் எலும்பு முறிவு அபாயத்தையும் இது அதிகரிக்கிறது.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில், ஒரு வயதான பெண்மணி ஒருவர் தனது உணவில் கொண்டு வந்துள்ள மாற்றங்களின் மூலம் முழங்கால் மூட்டு வலியைக் குறைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
டாக்டர் சாயாஜிராவ் கெய்க்வாட் என்கிற மருத்துவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு வயதான பெண்மணி தனது முழங்கால் வலியைக் குறைக்க உதவியாக இருந்த உணவு மாற்றங்கள் குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு முக்கிய உணவு மாற்றம் உங்கள் உடலுக்கு போதுமான அளவிலான புரோட்டீன்களை பெற காரணமாகிறது என்று கெய்க்வாட் அதில் குறிப்பிட்டிருந்தார்.
This is how I encourage elderly people to eat high protein foods.
With just putting them on high protein foods we see change in quality of their life.
Our elder deserve nutrient dense foods.
Eggs,paneer,meat,legumes rich diet.
Strictly lowering rice,stopping wheat helping her. pic.twitter.com/ouDOYDKniv
— Dr.Sayajirao Gaikwad (@sayajiraogaikwa) January 2, 2025
மேலும் அவர், “இதேபோல் தான், வயதானவர்கள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றங்களைக் காணமுடியும். முட்டை, பன்னீர், இறைச்சி, பருப்பு வகைகள் நிறைந்த உணவுகள் வயதானங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அரிசியைக் கண்டிப்பாகக் குறைப்பது மற்றும் கோதுமையை உட்கொள்வதை நிறுத்துவது குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தரும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமலேயே, அந்தப் பெண் எப்படி சாதிக்க முடிந்தது என்பதையும் த்ரெட்டில் குறிப்பிட்டிருந்தார். “ஆறு மாதங்களுக்கு முன்பு அவரால் மற்றவரின் ஆதரவின்றி நடக்க முடியவில்லை மற்றும் அவருக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்த அவர், தனது உணவில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். தற்போது தனது உடல்நிலையில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 75% முழங்கால் வலிகள் உணவுகளை மாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.
புரோட்டீன் ஏன் முக்கியமானது?
புரோட்டீன் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும், இது தசைகளை இயற்கையாக வலுப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது திசுக்களை சரிசெய்யவும், எலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் எடை இழப்புக்கான வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, ஆற்றலின் நல்ல ஆதாரமாகவும் உள்ளது.
First Published :
January 07, 2025 2:03 PM IST