உங்கள் தலைமுடியை ப்ளோ-ட்ரையிங், கர்லிங் அயர்ன்கள் அல்லது ஸ்ட்ரெய்ட்னர்கள் மூலம் அதிக வெப்பத்திற்கு உட்படுத்துவது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பம் முடியை வலுவிழக்கச் செய்து, வறட்சி, உடைதல் மற்றும் ஸ்ப்ளிட் ஹேர்க்கு வழிவகுக்கிறது.
முடிந்தவரை, உங்கள் தலைமுடியைக் காற்றில் உலர வைக்க வேண்டும் அல்லது சேதத்தைக் குறைக்கும் வகையில் குறைந்த வெப்ப ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடியை அதிகமாகக் கழுவுவது, அதன் இயற்கையான எண்ணெய் தன்மையை அகற்றி விடுவதால் உலர்ந்து, உடைந்துபோகும்.
இதையும் படிங்க: Thiruvalluvar Statue: வெள்ளி விழா காணும் திருவள்ளூர் சிலை... கட்டுமானம் குறித்து சிற்பி பகிரும் அறியத் தகவல்...
இதனால் உங்கள் முடி வகைக்கு ஏற்ற மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி, வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை உங்கள் தலைமுடியை வாஷ் செய்யலாம். இது உங்கள் உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய் தன்மையின் ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்க அனுமதிக்கிறது. மேலும், வலுவான மற்றும் அதிக மீள் தன்மை கொண்ட முடி பராமரிப்புக்கு உதவுகிறது.
ஈரமான தலை முடியை உலர்த்தத் தலையைத் துண்டால் அழுத்து வேகமாகத் தேய்ப்பது முடியில் உராய்வு மற்றும் உடைப்பை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக மென்மையான மைக்ரோஃபைபர் டவல், நல்ல காட்டன் துணி மூலம் உங்கள் தலைமுடியை மெதுவாக உலர வைக்கவும். இது சேதத்தைக் குறைக்கிறது மற்றும் முடி இழைகளில் தேவையற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது.
இறுக்கமான போனிடெயில்கள், பன் ஸ்டைல்கள், ஜடைகள் அல்லது உங்கள் தலைமுடியை இழுக்கும் பிற சிகை அலங்காரங்களைத் தொடர்ந்து அணிவதும் பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே தளர்வான ஸ்டைல்களைத் தேர்ந்தெடுங்கள்.
இதையும் படிங்க: உங்க சருமம் என்றும் இளமையாக ஜொலிக்கும்... தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்...
வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத நீங்கள் சாப்பிடும் மோசமான உணவும் உங்கள் தலை முடியைப் பலவீனமாக்கும். உங்கள் உணவில் பலவிதமான பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ளதை உறுதிசெய்து, உங்கள் தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உச்சந்தலை முக்கியமானது. உங்கள் உச்சந்தலையை அலட்சியம் செய்வது பொடுகு, வீக்கம் மற்றும் மயிர்க்கால் சேதத்திற்கு வழிவகுக்கும். உச்சந்தலையைத் தொடர்ந்து கழுவி, இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு மெதுவாக மசாஜ் செய்து, அதன் pH ஐ சமப்படுத்தவும், முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல உச்சந்தலையின் சுகாதாரத்தைப் பராமரிக்கவும்.
உங்கள் தலைமுடிக்குத் தவறான வகைத் தூரிகையைப் பயன்படுத்துவது முடியை உடைத்து சேதத்தை ஏற்படுத்தும். அகலமான பல் கொண்ட சீப்பு அல்லது மென்மையான முட்கள் கொண்ட சீப்பு தலைமுடிக்கு உகந்ததாக இருக்கும். முனைகளிலிருந்து தொடங்கி, முடி இழைகளில் அழுத்தத்தைக் குறைக்க உங்கள் வழியில் வேலை செய்யுங்கள்.
இதையும் படிங்க: Cracked Heels: குதிகால் வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க... வீட்டிலேயே ஈசியா சரிசெய்யலாம்...
மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கம் உங்கள் முடி உட்பட உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின், தேசிய சுகாதார நிறுவனம் கூற்றுப்படி, நாள்பட்ட மன அழுத்தம் முடி வளர்ச்சி சுழற்சியைச் சீர்குலைத்து, முடி உதிர்தல் மற்றும் மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கிறது. எனவே உங்கள் மனநலனை மேம்படுத்தப் பயிற்சி செய்யுங்கள் மற்றும் ஆரோக்கியமான முடியைப் பராமரிக்கப் போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்க.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 28, 2024 5:50 PM IST