Last Updated:December 25, 2024 2:15 PM IST
Strong Legs | உங்கள் கால்களை வலிமையாக வைத்துக் கொள்ள நினைக்கிறீர்களா?. அப்படி என்றால் உங்களுக்கான சில சிறந்த உணவுகளை இங்கே பார்க்கலாம்.
தினசரி செயல்பாடுகளுக்கு நம்முடைய கால்கள் வலுவாக இருப்பது மிக முக்கியம். சில வகை உடற்பயிற்சிகளும், ஆரோக்கியத்தை உறுதி செய்ய உதவும் சரியான ஊட்டச்சத்துக்களும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடும் போதும் மற்றும் உடல் பணிகளில் ஈடுபடும் போதும் செயல்திறனை மேம்படுத்த உதவும். நீங்கள் உங்கள் கால்களை வலிமையாக வைத்துக் கொள்ள நினைக்கிறீர்களா?. அப்படி என்றால் உங்களுக்கான சில நல்ல உணவுகளை இங்கே பார்க்கலாம்.
கிரீக் யோகர்ட்
கிரீக் யோகர்ட் என்பது அனைத்து அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ்களையும் கொண்ட ப்ரோட்டீன் நிறைந்த உணவாகும். இது வழக்கமான யோகர்ட்டை காட்டிலும் கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கும் உணவாகும். ஆனால் இதன் ஃப்ளேவர்ட் வெரைட்டிகளில் பெரும்பாலும் அதிக சர்க்கரை காணப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாதாம்
பாதாம் பருப்புகளில் ப்ரோட்டீன், பாலிஃபினால்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை கால்களை வலிமையாக்குகின்றன. இது மற்ற புரதங்களுடன் இணைந்து தசை மீட்சிக்கு (muscle recovery) உதவுகிறது.
கோழி நெஞ்சுக்கறி
கோழியின் நெஞ்சு பகுதியானது அதிக ப்ரோட்டீன் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டது. இது பாடிபில்டர்களுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. மேலும் கால்களை வலிமையாக வைக்க உதவுகிறது. அத்துடன் உடல் அமைப்பை லீனாக பராமரிக்கவும் இது உதவுகிறது.
டோஃபு (Tofu)
இது சோயா சார்ந்த புரத மூலமாகும். மேலும் இது ஒரு தாவர அடிப்படையிலான டயட் உணவாகும். நீங்கள் எடுத்து கொள்ளும் பல உணவுகளில் இறைச்சி மற்றும் கோழிக்கு பதிலாக சிறந்த ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும் டோஃபுவை அடிக்கடி பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது கால்களை வலிமையாக்க உதவுகிறது.
குயினோவா (Quinoa)
குயினோவா என்பது ஒரு முழுமையான தாவர அடிப்படையிலான ப்ரோட்டீன் ஆகும். இது மேலைநாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சிறுதானியம் ஆகும். மேலும் இதில் அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இது கால்களை வலிமையாக்க தேவையான மற்றும் தசை மீட்புக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் எனர்ஜியை வழங்குகின்றன.
பீன்ஸ்
தாவர அடிப்படையிலான புரத மூலமாக பீன்ஸ் உள்ளது. பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது. மேலும் பீன்ஸை முழு கோதுமை அரிசி, முழு பாஸ்தா அல்லது சோளம் போன்ற தானியங்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது, அது தசை வளர்ச்சிக்கு அவசியமான அதிகளவு மற்றும் உயர் தர அமினோ-ஆசிட்ஸ்களை நம் உடலுக்கு வழங்கும்.
First Published :
December 25, 2024 2:15 PM IST