உங்கள் கண் ஆரோக்கியம், பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள்..

1 month ago 8

Last Updated:December 14, 2024 6:25 PM IST

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்களான ஏ, சி மற்றும் ஈ மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

News18

நம்முடைய ஐம்புலன்களில் முக்கியமான ஒன்று கண் பார்வை. எனவே குறிப்பிட்ட வயதிற்கு மேல் கண் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண் ஆரோக்கியத்தை பராமரிப்பது, சீரான இடைவெளியில் கண் நிபுணரிடம் பரிசோதனைக்கு செல்வது, முறையாக பரிசோதித்து கண்ணாடி அணிவது என பல வழிகளில் பார்வையை சிறப்பாக வைத்து கொள்ள முடியும்.

இவற்றுக்கு மத்தியில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி டயட்டில் தவறாமல் சேர்த்து கொள்வது பார்வை திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வயது சார்ந்த பிரச்சனைகளான கண்புரை, உலர் கண் நோய்க்குறி மற்றும் மாகுலர் சிதைவு போன்ற தொடர்புடைய நிலைமைகளால் பார்வை இழப்பு ஏற்படுவதை தடுக்கிறது அல்லது தாமதப்படுத்தும் என்கிறார் நிபுணர்கள்.

உதாரணமாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்களான ஏ, சி மற்றும் ஈ மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. குருகிராமிலிருக்கும் நோபல் ஐ கேர் இயக்குநர் டாக்டர் திக்விஜய் சிங் பேசுகையில் "ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது கண்களின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று பத்தில் எட்டு கண் மருத்துவர்கள் நம்புகின்றனர். அத்துடன் இந்த பழக்கம் வயது தொடர்பான கண் கோளாறுகளை தடுக்கும்" என்றார்.

சால்மன் போன்ற மீன்களின் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ், விழித்திரை ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் ட்ரை ஐ சின்ட்ரோம்-ஐ குறைக்கவும் அவசியம். அதே போல பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள் மற்றும் பிற ஆன்டிஆக்ஸிபன்ட்ஸ்களில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஈ மற்றும் சி உள்ளிட்டவை புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. கீரை மற்றும் பிற இலை காய்கறிகளில் காணப்படும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்றவை ப்ளூ லைட்டை ஸ்கிரீனிங் அவுட் செய்வதன் மூலம் கண்களுக்கு சன்ஸ்கிரீனாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. ஜிங்க்கானது விழித்திரை ஆரோக்கியம் மற்றும் தெளிவான பார்வையை தக்கவைக்க முக்கியமானது. இது பெரும்பாலான மட்டி மீன் மற்றும் பருப்பு வகைகளில் காணப்படுகிறது.

பிரபல கண் மருத்துவர் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணரான நீரஜ் சந்துஜா பேசுகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்கு சமச்சீரான டயட் ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க உதவுகிறது மற்றும் வயது தொடர்பான பார்வை பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்றார். மேலும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நம் டயட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய சில உணவுகளையும் அவர் பட்டியலிட்டார்.

இலை கீரைகள்

- பசலைக்கீரை: லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் இந்த கீரையில் நிறைந்துள்ளது

- காலே (Kale): வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம்

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரி:

- ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்துள்ளது

- ஸ்ட்ராபெர்ரிகள்: வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம்

ஃபேட்டி ஃபிஷ்:

- சால்மன்: ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்தது

- மத்தி: ஒமேகா-3 மற்றும் வைட்டமின் டி அதிகம்

நட்ஸ் மற்றும் சீட்ஸ்:

- பாதாம்: வைட்டமின் ஈ நிறைந்துள்ளது

- சூரியகாந்தி விதைகள்: வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் அதிகம்

முட்டை மற்றும் கேரட்:

- முட்டைகள்: லுடீன் மற்றும் ஜியாக்சான்டின் நிறைந்தது

- கேரட்: வைட்டமின் ஏ அதிகம்

பிற பயனுள்ள உணவுகள்...

- சர்க்கரைவள்ளி கிழங்கு: வைட்டமின் ஏ நிறைந்துள்ளது

- அவகேடோ: லுடீன் மற்றும் ஜியாக்சான்டின் அதிகம்

- டார்க் சாக்லேட்: ஃபிளாவனாய்ட்ஸ் நிறைந்தது

First Published :

December 14, 2024 6:25 PM IST

Read Entire Article