இஸ்ரோ தலைவர் வி.நாராயணனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2 weeks ago 24

Published: Wednesday, January 8, 2025, 18:05 [IST]

மோடி அரசு வி.நாராயணனை புதிய இஸ்ரோ தலைவராக நியமித்திருக்கிறது. அவர் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் எஸ்.சோம்நாத் பொறுப்பில் பதவி ஏற்க உள்ளார். அமைச்சரவை நியமனக் குழுவின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி இவருடைய பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையில் இஸ்ரோ மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளது. இஸ்ரோ தனது சிறந்த செயல்பாடுகள் மற்றும் வெற்றிகரமான திட்டங்களின் மூலம் அதிக அளவிலான விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி துறையில் வேலை தேடுபவர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது.

குறிப்பாக இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாடு சர்வதேச விண்வெளி ஆய்வில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இதிலிருந்து இஸ்ரோவில் சேர்ந்து தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று எண்ணியோர் பலர். அப்படி இருக்கையில் தற்போது புதிதாக இஸ்ரோவின் சேர்மேனாக பொறுப்பேற்றிருக்கும் வி.நாராயணனின் சம்பளம் எவ்வளவு? என்று தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாக உள்ளனர்.

 இஸ்ரோ தலைவர் வி.நாராயணனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இஸ்ரோ தலைவரின் சம்பளம்: 2023-ஆம் ஆண்டில் RPG என்டர்பிரைசஸ் தலைவர், இஸ்ரோ சேர்மன் சோமநாதனின் சம்பளம் குறித்து தனது X பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சோமநாதன் மாத வருமானமாக ரூ. 2.5 லட்சம் பெற்று வருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் தனது பதிவில் "இஸ்ரோ தலைவர் சோமநாத் மாத சம்பளம் ரூ.2.5 லட்சம்.. இது சரியானதா? நியாயமானதா? அவரைப் போன்றவர்கள் பணத்திற்கு அப்பாற்பட்டு பணிபுரிகின்றனர். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் திறமை, ஆராய்ச்சி, அர்ப்பணிப்பு நாட்டுக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதில் பணியாற்றி வருகின்றனர். அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ளவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்!", என்று பதிவிட்டு இருந்தார்.

எனவே இதை வைத்து நாம் இஸ்ரோ தலைவரின் மாத சம்பளத்தை மதிப்பிடலாம். ஆனால் தலைவர் பதவியின் சம்பள அமைப்பு குறித்து இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

இஸ்ரோவின் புதிய தலைவரான நாராயணன் ஐஐடி காரக்பூர் முன்னாள் மாணவர். அவர் கிரையோஜெனிக் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும் போது தனது கல்வி திறனுக்காக வெள்ளி பதக்கம் பெற்றார். அதன்பின்னர் ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றார். நாராயணன் 1984-ஆம் ஆண்டு தொடங்கி 40 ஆண்டுகளாக இஸ்ரோவில் ஒரு அங்கமாக இருந்து வந்தவர். அவருக்கு ராக்கெட் மற்றும் விண்கலங்களைப் பற்றிய பரந்த அனுபவம் உள்ளது. நாராயணன் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளுள் ஒருவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ISRO Chairman Salary: How Much Does V Narayanan Earn as the Head of India’s Space Agency?

Discover the estimated salary of ISRO Chairman V Narayanan. Learn about his earnings, perks, and benefits as the head of India's premier space agency.

Read Entire Article