இளநீர் குடிப்பதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

2 weeks ago 9

Last Updated:December 29, 2024 12:37 PM IST

Coconut Water | பலரும் இளநீரை ஒரு சூப்பர்ஃபுட் என்று கருத தொடங்கி உள்ளனர். ஆனால் உண்மையில் இது அனைவருக்கும் ஏற்றதா என்று கேட்டால் இதற்கான பதில் இல்லை என்பதே. யாரெல்லாம் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

News18

இயற்கையின் கொடையாக கிடைக்கும் இளநீர், ஒரு ஆரோக்கிய பானமாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே இது அனைவருக்கும் ஏற்றதா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பலரும் இளநீரை ஒரு சூப்பர்ஃபுட் என்று கருத தொடங்கி உள்ளனர். ஆனால் உண்மையில் இது அனைவருக்கும் ஏற்றதா என்று கேட்டால் இதற்கான பதில் இல்லை என்பதே. சில நபர்களுக்கு இளநீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. யாரெல்லாம் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  • இளநீரில் இயற்கையான சர்க்கரை உள்ளது. எனினும் இந்த சர்க்கரை நாம் வழக்கமான நுகர்வுக்கு பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை போல தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், நீரிழிவு நோயாளிகள் பொதுவாக சர்க்கரை நுகர்வை குறைக்க வேண்டும். அதிகப்படியான சர்க்கரையை சேர்த்து கொள்வது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோய் இருந்தால் இளநீர் குடிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
  • இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நமது உடலுக்கு பொட்டாசியம் இன்றியமையாதது என்றாலும், ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் அல்லது கிட்னி டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தால், அதிக பொட்டாசியம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அதிகப்படியான பொட்டாசியம் ரத்தத்தில் சேர்ந்தால் அது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • இளநீரில் சோடியம் அளவு குறைவாக இருந்தாலும், சிலர் இதை குடித்த பின், தங்களின் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இளநீர் பருகுவதை குறைத்து கொள்ள வேண்டும். அதிகமாக இளநீர் குடிப்பது சில நேரங்களில் ரத்த அழுத்தத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும்.
  • சில நபர்களுக்கு தேங்காய் அலர்ஜி இருக்கலாம். இது அவர்களுக்கு இளநீர் குடித்தாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். தேங்காய் அல்லது இளநீர் பொதுவாக ஏற்படுத்தும் அலர்ஜி அறிகுறிகளில் சரும வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை அடங்கும். உங்களுக்கு தேங்காய் அலர்ஜி இருந்தால் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
  • இளநீர் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு இளநீர் கொடுத்தால் மிதமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் அதிமாக இளநீர் பருகினார்கள் என்றால் அவர்களுக்கு வாயு, வயிற்றுப்போக்கு அல்லது அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்க விரும்பினால், அதற்கு முன் உரிய மருத்துவரை அணுகுவது அவசியம்.
  • தங்களின் உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் பலரும் இளநீரை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்வார்கள். ஏனெனில் இளநீரில் கலோரிகள் குறைவு, எனினும் இதில் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும் இயற்கை சர்க்கரை இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் இளநீர் குடிக்க விரும்பினால் மிக குறைவாக அல்லது மிதமாக குடித்து கொள்ளலாம்.

First Published :

December 29, 2024 12:37 PM IST

Read Entire Article