இன்று முதல் இனி பிறக்கும் குழந்தைகள் ’ஜென் பீட்டா’ தலைமுறை..

3 weeks ago 68

Last Updated:January 01, 2025 12:09 PM IST

இன்ஸ்டாகிராம் தான் உலகம்.... ரீல்ஸ்கள் தான் உயிர் காக்கும் Stress Busterகள் என வாழும் தற்போதைய நவீன ஜென் ஆல்பா தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. இதில், அவர்களையே பழசாக்கும் வகையில் வந்துள்ளது ஜென் பீட்டா தலைமுறை.

News18

இன்று முதல் இனி பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் ஜென் பீட்டா தலைமுறை என அழைக்கப்படுவார்கள். 1901 முதல் இதுவரை கடந்து வந்த தலைமுறைகள் என்னென்ன?

இன்ஸ்டாகிராம் தான் உலகம்.... ரீல்ஸ்கள் தான் உயிர் காக்கும் Stress Busterகள் என வாழும் தற்போதைய நவீன ஜென் ஆல்பா தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. இதில், அவர்களையே பழசாக்கும் வகையில் வந்துள்ளது ஜென் பீட்டா தலைமுறை.

2025 ஜனவரி ஒன்று அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இந்த ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன. 2039 டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 12 மணி வரை பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இந்த தலைமுறைக்குள் அடங்கி விடுவார்கள்.

பொதுவான கலாச்சார, சமூக, வரலாற்று அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பிறப்பவர்கள் ஒரே தலைமுறை பெயரில் அழைக்கப்படுகின்றனர். தலைமுறைகளுக்கு இப்படி பெயர் வைக்கும் முறை 1901 இல் இருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஜென் பீட்டா, 7 ஆவது தலைமுறையாகும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மையின் சிறப்பான பங்களிப்பு, இந்த தலைமுறைக்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முந்தைய தலைமுறை அதாவது 2010 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகள், ஜென் ஆல்பா. இவர்கள் டிஜிட்டல், தொழில்நுட்பம் சார்ந்த உலகத்தை அதிகளவில் சார்ந்து வளர்ந்து வருகின்றனர். சுமார் 200 கோடி பேருடன் மிகப்பெரிய தலைமுறையாக இந்த ஜென் ஆல்பா பார்க்கப்படுகிறது.

இதே போல் 1997 முதல் 2009 ஆம் ஆண்டுக்கு இடையே பிறந்தவர்கள் ஜென் ஸி(Gen z) தலைமுறைகளாக அழைக்கப்படுகிறார்கள். கொரோனா பேட்ச் என்றும் நகைச்சுவையுடன் அழைக்கப்படும் இந்த தலைமுறையினர், நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திடீரென ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தெரிந்தவர்களாக உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமூக, பாலின பாகுபாடு உள்ளிட்டவற்றை உடைப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

1965 மற்றும் 1980 க்கு இடையில் பிறந்தவர்கள், ஜென் X என்று அழைக்கப்படுகின்றனர். பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றதால் காலி வீடுகளில் வளர்ந்த முதல் தலைமுறை. குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம் என்பதை பெற்றோர் உணர்ந்த காலக்கட்டம்.

1946 முதல் 1964 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள், பேபி பூமர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இந்த தலைமுறையில் பிறந்தவர்கள், நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாக உள்ளனர்.

1928 முதல் 1945 வரை பிறந்தவர்கள் அமைதியான தலைமுறை என வரையறுக்கப்பட்டுள்ளார்கள். மந்தநிலை, இரண்டாம் உலகப் போரின் போது வளர்ந்த இவர்கள், அமைதியான, மிகவும் பழமைவாத வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

1901 முதல் 1927 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் கிரேட்டஸ் தலைமுறை என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த தலைமுறையில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தற்போது 100 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.

First Published :

January 01, 2025 12:09 PM IST

Read Entire Article