உங்கள் அன்றாட வழக்கத்தில் சில எளிய மாற்றங்களைச் செய்தால், உங்கள் வயதை விட இளமையாக இருக்க முடியும் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இந்த 5 பழக்கவழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்தால், 60 நாட்களில் இளமையாக மாறுவதற்கான பயணத்தைத் தொடங்கலாம்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 2, 2025, 2:46 PM IST Published by
Sivaranjani E
01
'உங்கள் சருமம் உங்கள் வயதை வெளிப்படுத்தாது...' இந்த விளம்பர வரி மிகவும் பிரபலமானது. 90 கிட்ஸ்களிடம் இந்த வார்த்தை பிரபலமாக இருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் கூட. முதுமை என்பது இயற்கையான செயல் என்றாலும், ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் தனது வயதை விட இளமையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.
02
ஆனால் உங்கள் அன்றாட வழக்கத்தில் சில எளிய மாற்றங்களைச் செய்தால், உங்கள் வயதை விட இளமையாக இருக்க முடியும் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இந்த 5 பழக்கவழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்தால், 60 நாட்களில் இளமையாக மாறுவதற்கான பயணத்தைத் தொடங்கலாம். இந்த 5 பழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.
03
இளமையாக இருக்க விரும்பினால், இதை குடியுங்கள்: 'தண்ணீர் தான் உயிர்...' என்ற வரியை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், 'இளமையாக தோற்றமளிப்பதற்கான உண்மையான ரெசிபி தண்ணீர்' மட்டுமே. இதை நீங்கள் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கூறுவதை கேட்டு சலிப்படைந்தீர்ப்பீர்கள். ஆனால் இளமையின் உண்மையான ரகசியம் இதுதான். உடல் 60% தண்ணீரால் ஆனது மற்றும் உங்கள் சருமம் உங்கள் உடலின் மிகப்பெரிய பகுதியாகும். அதாவது உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் மந்தமான சருமத்திற்கு முதல் காரணம் நீர்ச்சத்து இல்லாதது தான் காரணம். அடுத்த 60 நாட்களுக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பிறகு பாருங்கள். உங்கள் சரும்ம் உங்களுக்கு நன்றி சொல்லும்.
04
தூங்குவதை மறந்துவிடாதீர்கள்: இரவு வெகு நேரம் வரை அலுவலக் வேலையில் ஈடுபடுவது அல்லது மொபைலில் படம் பார்த்துக்கொண்டே அதிகாலை 3 மணிக்கு தூங்குவது... இந்தப் பழக்கங்கள் அனைத்தும் இன்று உங்களுக்கு சாகசமாகத் தோன்றலாம். ஆனால் இது உங்கள் மிகப்பெரிய எதிரி. நீங்கள் தூங்கும்போது, உங்கள் உடலில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. சருமத்தை இளமையாக மாற்றும் கொலாஜன் இந்த சமயத்தில் தான் உருவாகிறது. இந்த கொலாஜன் தோல் தொய்வடையாமல் தடுக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
05
சருமத்திற்கு ஏற்ற உணவு: நாம் எதை உண்கிறோமோ, அதைதன் பிரதிபலிக்கிறோம். இது மிகவும் பழைய பழமொழி என்றாலும் இன்றும் அது உண்மை. உண்மையில் நீங்கள் சாப்பிடும் உணவு, உங்கள் சருமம் மற்றும் தோற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. சர்க்கரை நிறைந்த உணவு உங்கள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும். இது வயதான செயல்முறையை அதிகரிக்கிறது. அதேசமயம், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவைக் குறைத்து ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை உங்களுக்கு வழங்குகிறது. ஒமேகா-3 மற்றும் கொழுப்பு அமிலம் நிறைந்த உணவையும் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
06
சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாப்பு: பூமி இயங்குவதற்கு சூரிய ஒளி மிகவும் முக்கியமானது. ஆனால் அதே உயிர் கொடுக்கும் சூரியன் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களையும் வெளியிடுகிறது. இது உங்கள் சருமத்தை மிகவும் சேதப்படுத்துகிறது. உங்கள் சருமத்திற்கு சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உங்கள் தோலில் தோன்றும் மெல்லிய கோடுகள் மற்றும் முதுமையின் அறிகுறிகள், சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுவதால் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெயிலில் செல்வதற்கு முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்.
07
மது, சிகரெட் போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள்: 'உங்களுக்கு ஒருமுறை தான் உயிர் வாழப்போகிறீர்கள்; அதனால் உங்களுக்கு பிடித்த எல்லா விஷயங்களிலும் ஈடுபடுங்கள்' என்ற வசனங்கள் திரைப்படங்களில் நன்றாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில், உங்கள் கட்டுப்பாடான வாழ்க்கை உங்களுக்கு அழகான வாழ்க்கையை வழங்குகிறது. மதுபான உட்கொள்வது உங்கள் சருமத்தில் நீரிழப்பு ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, உங்களை விரைவாக முதிர்ச்சியடையச் செய்யும். மதுபானம் உங்கள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கிறது. வயதான தோறத்திற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
- FIRST PUBLISHED : January 2, 2025, 2:46 PM IST
இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடித்தால், 2 மாதங்களில் இளமையா மாறிடுவீங்க..!
'உங்கள் சருமம் உங்கள் வயதை வெளிப்படுத்தாது...' இந்த விளம்பர வரி மிகவும் பிரபலமானது. 90 கிட்ஸ்களிடம் இந்த வார்த்தை பிரபலமாக இருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் கூட. முதுமை என்பது இயற்கையான செயல் என்றாலும், ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் தனது வயதை விட இளமையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.
MORE
GALLERIES