இந்த 3 விஷயங்களை 30 நாட்கள் செஞ்சாலே போதும்.. உடலில் மாற்றம் தெரியும்

1 month ago 12

Last Updated:December 05, 2024 9:10 PM IST

பெரும்பாலான மக்களுக்கு இந்த பட்டியலில் உடல் எடையை குறைப்பது இருக்கும். நீங்களும் இதுபோன்ற ஒன்றைத் திட்டமிட்டிருந்தீர்கள், ஆனால் இதுவரை உங்களால் உங்கள் இலக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

News18

டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது, அதாவது 2025ஆம் ஆண்டுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் ஏற்கனவே புத்தாண்டு தீர்மானங்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். புத்தாண்டை சிறப்பாகத் தொடங்க மக்கள் பலவிதமான விஷயங்களைத் திட்டமிட்டு அதற்கான பட்டியலைத் தயாரிக்கின்றனர். அதே நேரத்தில், பெரும்பாலான மக்களுக்கு இந்த பட்டியலில் உடல் எடையை குறைப்பது இருக்கும். நீங்களும் இதுபோன்ற ஒன்றைத் திட்டமிட்டிருந்தீர்கள், ஆனால் இதுவரை உங்களால் உங்கள் இலக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கே நாங்கள் உங்களுக்கு 3 மிக எளிதான வழிகளைக் கூறுகிறோம், அவற்றை 30 நாட்களுக்கு தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், ஆண்டின் கடைசி மாதத்தில் கூட உங்கள் உடலை முற்றிலும் மாற்றலாம். அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

இது தொடர்பாக ​​மும்பையின் பரேலில் உள்ள க்ளெனகிள்ஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறியதாவது, தொடர்ந்து 30 நாட்களுக்கு ஆரோக்கியமான மற்றும் எளிமையான வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட்டு, தினமும் குறைந்தது 10 ஆயிரம் ஸ்டெப்கள் நடப்பதன் மூலமும், இனிப்புகளை முற்றிலுமாக கைவிடுவதன் மூலமும், உங்கள் உடலில் அற்புதமான உடல் மாற்றங்களைக் காணலாம் என்று கூறியுள்ளார்.

முதலில், நாம் சர்க்கரையை கைவிடுவது பற்றி டாக்டர் அகர்வால் கூறியதாவது, தொடர்ந்து 30 நாட்களுக்கு இனிப்பு எதையும் சாப்பிடாமல் இருப்பதன் மூலம், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் உணருவீர்கள், இது உங்கள் எடை அல்லது உடல் பருமனை விரைவாகக் குறைக்கும்.

அதாவது இனிப்புகளை கைவிடுவதன் மூலம் 30 நாட்களில் அற்புதமான மாற்றத்தை அடையலாம். இருப்பினும், இதைச் செய்வதன் மூலம் முதல் சில நாட்களுக்கு நீங்கள் இனிப்பின் மீது ஏக்கமாகவோ அல்லது எரிச்சலாகவோ உணரலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இனிப்புகளை உண்ணாமல் இருந்தால், சில நாட்களில் நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள் என்று கூறியுள்ளார்.

Also Read | தேனில் இருக்கும் மருத்துவம் தெரியுமா..? தொற்று நோய்களுக்கு சிறந்த நிவாரணி..!

சர்க்கரையை குறைப்பது, நடைபயிற்சி மற்றும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது போன்ற உடல் ரீதியான செயல்பாடுகளை தவறாமல் செய்வதால், உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், அவர்களின் உணவில் வைட்டமின்கள், நார்ச்சத்து, ஒமேகா -3 ஃபாட்டி ஆசிட்கள், ப்ரோடீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டுமென்று என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். உங்கள் தினசரி உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக, ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் ஸ்டெப்கள் நடப்பதால், உடல் எடையை குறைக்கவும், உங்கள் உடலை சிறந்த முறையில் மாற்றவும் உதவுகிறது. நடைபயிற்சி என்பது எளிதான உடற்பயிற்சியாகும், இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல அற்புதமான நன்மைகளைப் பெறுவீர்கள் என்று டாக்டர் கூறியுள்ளார். இந்தப் புதிய வழிமுறைகளை தொடங்குவதற்கு முன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தச் சர்க்கரை அளவு போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

First Published :

December 05, 2024 9:10 PM IST

Read Entire Article