இந்த ஒரு பொருள் போதும்.. எதையும் ஈசியா சமாளிச்சிடலாம்

3 weeks ago 9

Last Updated:December 24, 2024 4:36 PM IST

நோய் எதிர்ப்பு சக்தி பொதுவாகவே குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற நோய் தொற்றுகள் ஏற்படுவது அதிகமாக இருக்கும். இப்படி இருக்க பாதாம் பருப்பு மற்றும் வால்நட் பருப்பு போன்ற வைட்டமின் E மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் கொள்வது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

News18

குளிர்காலம் வந்துவிட்டதால் குளிர்ந்த வானிலையை சமாளித்து ஆரோக்கியமாக இருப்பதற்கு நம்முடைய உடலுக்கு கூடுதல் போஷாக்கு தேவைப்படுகிறது. அப்படி இந்த சீசனில் உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு எளிமையான, அதே நேரத்தில் டேஸ்ட்டான வழி டிரை ஃப்ரூட்ஸ். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த டிரை ஃப்ரூட்ஸ் ஆரோக்கிய நலன்களின் இயற்கை களஞ்சியமாக திகழ்கிறது. எனவே இந்த பதிவில் குளிர்கால உணவில் டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஆற்றல் பூஸ்டர்

குறுகிய பகல் நேரம் மற்றும் குளிர்ந்த வானிலையின் காரணமாக நாம் பெரும்பாலும் குளிர்காலத்தில் சோம்பேறித்தனமாக உணர்வதுண்டு. ஆனால் இதனை எதிர்த்து போராடுவதற்கு பேரிச்சம்பழம், உலர்ந்த அத்தி, உலர்ந்த திராட்சை போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்த டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவது உங்களுக்கு உடனடி ஆற்றல் ஊக்கியாக அமைகிறது. இது உங்களை ஆக்டிவாக வைத்து, நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி பொதுவாகவே குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற நோய் தொற்றுகள் ஏற்படுவது அதிகமாக இருக்கும். இப்படி இருக்க பாதாம் பருப்பு மற்றும் வால்நட் பருப்பு போன்ற வைட்டமின் E மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் கொள்வது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் முந்திரி பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு போன்றவற்றில் சிங்க் மற்றும் செலினியம் இருப்பதால் இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியம்

இந்த வறண்ட வானிலை நம்முடைய சருமம் மற்றும் தலைமுடியை மோசமாக பாதிக்கிறது. பாதாம் பருப்பு மற்றும் வால்நட் பருப்புகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகளும் வைட்டமின் E ஊட்டச்சத்தும், தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, அதனை பொலிவாக வைக்கிறது. கூடுதலாக இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பொடுகு பிரச்சனையை எதிர்த்துப் போராடி, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை வழங்குகிறது.

கத கதப்பாக வைக்கிறது பேரிச்சம்பழம், ஆப்பிரிகாட் மற்றும் உலர்ந்த திராட்சை போன்ற டிரை ஃப்ரூட்ஸ் கத கதப்பு தன்மையை கொண்டுள்ளன. இவற்றை சாப்பிடுவதால் நம்முடைய உடல் வெப்பநிலை குளிர்ந்த வானிலைக்கு ஏற்ற வகையில் சீராக பராமரிக்கப்படும்.

உடல் எடை கட்டுப்படுத்துவதற்கு

டிரை ஃப்ரூட்ஸ் மிதமான அளவு சாப்பிட்டால் உங்களுடைய உடல் எடையை நிச்சயமாக சீராக பராமரிக்கலாம். இதில் உள்ள அதிக நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பி உணர்வோடு வைத்து ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் சாப்பிடுவதில் இருந்து உங்களை தடுக்கிறது.

இதய ஆரோக்கியம்

வால்நட் பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இவற்றை அன்றாட டயட்டில் சேர்ப்பதால் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்து, ஒட்டுமொத்த இதயத்தின் செயல்பாடு மேம்படும்.

செரிமானம்

குளிர்காலத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறையின் காரணமாக நம்முடைய செரிமானம் பாதிக்கப்படலாம். எனினும் உலர்ந்த அத்தி மற்றும் ப்ரூன்களை சாப்பிடுவது இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள உணவு நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பதற்கு உதவுகிறது.

தினசரி குளிர்கால உணவில் டிரை ஃப்ரூட்ஸ் சேர்ப்பது எப்படி?

*காலை நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த உலர்ந்த திராட்சை மற்றும் பாதாம் பருப்பை சாப்பிட்டு உங்களுடைய நாளை ஆரம்பியுங்கள்.

*தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும் போது வால்நட் பருப்பு, முந்திரிப் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்புகளை கலந்து உங்களுடைய பசியை ஆற்றிக் கொள்ளுங்கள். *பாயாசம், ஓட்ஸ், புட்டிங் போன்ற இனிப்புகள் செய்யும் பொழுது அதனுடைய ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதற்கு பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கலாம்.

*டீ, காபிக்கு பதிலாக வெதுவெதுப்பான பாலில் பேரிச்சம்பழம், குங்குமப்பூ மற்றும் நொறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து தூங்குவதற்கு முன்பு பருகுங்கள்.

First Published :

December 24, 2024 4:36 PM IST

Read Entire Article