Updated: Wednesday, January 8, 2025, 20:55 [IST]
பொதுவாக நாட்டில் உள்ள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வாழ்க்கை முறை, வாழ்க்கை தரம் போன்றவை மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருக்கும். அதேபோல அவர்கள் எவ்வளவு ஊதியம் பெறுவார்கள்? என்பது குறித்தும் தெரிந்து கொள்ள சிலருக்கு பிடிக்கும். இந்தக் கட்டுரையில் நம் நாட்டு தலைவர்களின் சராசரி ஊதியம் எவ்வளவு? என்பது குறித்து பார்ப்போம்.
சில நேரங்களில் பிறரின் சம்பளத்தைப் பற்றி அறிவதே சுவாரசியமான ஒன்றுதான். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்.. அரசியல்வாதிகள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது.. என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். அது குறித்து பார்ப்போம்.
இந்திய குடியரசு தலைவரின் சம்பளம்: இந்திய குடியரசு தலைவர் மாத ஊதியமாக ரூ. 5 லட்சம் பெறுகிறார். மேலும் இந்த சம்பளத்திற்கு எந்தவித வரியும் இல்லை. முற்றிலும் வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவரின் சம்பளம்: இந்தியத் துணை குடியரசு தலைவருக்கு மாத ஊதியமாக ரூ.4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு அலோவென்ஸ் வழங்கப்படலாம்.
பிரதமருக்கான சம்பளம்: பிரதமருக்கு மாத ஊதியமாக 2,80,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் சம்பளம்: தெலுங்கானா முதலமைச்சரின் தற்போதைய சம்பளம் மாதத்திற்கு 410,000 ரூபாய். ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர், அலவன்ஸுடன் சேர்த்து மாதச் சம்பளமாக ரூ. 335,000 பெறுகிறார்.
இந்தியாவின் ஆளுநர் சம்பளமாக ரூ. 3.50 லட்சம் பெறுகிறார். இந்திய தலைமை நீதிபதியின் மாத ஊதியம் ரூ.2.80 லட்சம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ. 2.50 லட்சம். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களின் நிலையைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.2,50,000 வரை ஊதியம் பெறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். அதோடு 5 வருடங்களுக்கு ஒரு முறை இந்த சம்பளம் உயர்த்தப்படுகிறது. கூட்டங்களில் பங்கேற்பதற்கும் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் படி வழங்கப்படுகிறது. இவை அவர்களின் அடிப்படை சம்பளத்திற்கு அதிகமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் பொதுவான தகவலுக்காக மட்டுமே. சரியான மற்றும் சமீபத்திய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பார்க்கவும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Indian Officials' Salaries in 2025. PM, President, CMs, Governors, and Other Key Positions!
Discover the updated 2025 salaries of Indian officials, including the Prime Minister, President, Chief Ministers, Governors, and more.