16ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷெர் ஷா சூரி தான் நாணயங்களுக்கு ‘ருபி’ என்று தனது நாட்டின் நாணயத்தை பயன்படுத்த தொடங்கினார்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 24, 2024, 11:40 AM IST Published by
Raj Kumar
01
நம் இந்திய ரூபாய் எப்போது பயன்பாட்டிற்கு வந்தது, தற்போது எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.
02
சுமார் 140 கோடி மக்கள் இருக்கும் ஒரு நாட்டின் பணத்தை அந்த நாடு எப்படி கையாளும் என்பதை நினைத்துப்பாருங்கள். எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும்? அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை எண்ணினால் நமக்கு பிரமிப்பாகவே இருக்கும்.
03
இந்தியாவில் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்டவைகளை வைத்து நாணயங்கள் தயாரிக்கப்பட்டது. வெள்ளி நாணயங்கள் சமஸ்கிருதத்தில் ‘ருபையா’ என்று அழைக்கப்பட்டது.
04
இதையடுத்து, 16ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷெர் ஷா சூரி தான் நாணயங்களுக்கு ‘ருபி’ என்று தனது நாட்டின் நாணயத்தை பயன்படுத்த தொடங்கினார்.
05
1861ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், பேரரசர் ஷெர் ஷா சூரி அறிமுகப்படுத்திய ‘ருபி’ என்ற சொல் இந்திய நாணயத்தைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் அதே தொடர்ந்தது.
06
தற்போது இந்திய ரூபாய் நோட்டுக்கள் 4 இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் நாஷிக், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் ஆகிய இடங்களில் இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள மைசூர், மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி ஆகிய இடங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுகிறது.
07
மேலும் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கப்படுகிறது. இவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகிறது.
08
பணத்தை அச்சடிப்பது பிரதானமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுவே நாணயங்களை அச்சடிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- FIRST PUBLISHED : December 24, 2024, 11:40 AM IST
Rupee: இந்திய பணம் எங்கே அச்சடிக்கப்படுகிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்
நம் இந்திய ரூபாய் எப்போது பயன்பாட்டிற்கு வந்தது, தற்போது எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.
MORE
GALLERIES