Last Updated:January 02, 2025 1:16 PM IST
5ஆவது போட்டியை குறைந்தது டிரா செய்தாலே, பார்டர் கவாஸ்கர் கோப்பையை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் நிலை உள்ளது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், சிட்னியில் ஐந்து நாட்களும் முழுமையாக ஆட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 1 -2 என பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் நாளை தொடங்கும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த போட்டி, மறைந்த வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத்தின் நினைவாக நடைபெறும் 'பிங்க்' டெஸ்ட் போட்டியாகும். போட்டியின் மூன்றாம் நாளில், சிட்னி கிரிக்கெட் மைதானம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்பட்டுள்ளது. புற்றுநோய் ஆதரவு மற்றும் விழிப்புணர்வுக்காக கோடிக்கணக்கான டாலர்கள் திரட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “அணிக்குள் நடக்கும் உரையாடல்கள் பொதுவெளியில் பேசக்கூடாது..” - கவுதம் கம்பீர் காட்டம்
இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என Accuweather அறிக்கை கொடுத்துள்ளது. சிட்னியில் போட்டியின் இறுதி நாளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், டெஸ்ட் போட்டி தடைபடலாம் என கூறப்பட்டுள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், மழையால் போட்டி பாதிக்கப்படலாம் என்பது இந்திய அணியை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதனால் முடிந்தவரை வெற்றியை விரைவாக பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், மோசமான வானிலை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டிரா செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் வென்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நுழைவதை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் போட்டியை குறைந்தது டிரா செய்தாலே, பார்டர் கவாஸ்கர் கோப்பையை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் நிலை உள்ளது.
கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட வேண்டுமானால், 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். மேலும் அடுத்து நடக்கவிருக்கும் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைய வேண்டும். கடும் நெருக்கடி இருப்பதால் 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் முனைப்புடன் களமிறங்கக்கூடும் என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
First Published :
January 02, 2025 1:16 PM IST