Last Updated:January 01, 2025 7:53 AM IST
வைட்டமின்-டி எலும்புகளை வலிமையாக பராமரிக்க உதவுவதோடு இதய நோய், நீரிழிவு, மூட்டு தேய்மானம் வராமல் தடுப்பதுடன் உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
இதய நோய்களுக்குப் பின்னால் உணவுமுறை, நவீன வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன குறிப்பாக இதய நோய் வருவதற்கு குறிப்பிட்ட வயது எதுவும் இல்லை, அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது. இருப்பினும் சில வைட்டமின்கள் இல்லாததால் மாரடைப்பு ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மன்பிரீத் கல்ரா கூறியுள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் இதய நோய்கள் தான் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதன்மையானதாக இருக்கிறது. அதிக உடல் வலி, மூட்டு வலி, சோர்வு, பலவீனம் போன்றவை வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகளாகும். நமது உடலில் சூரிய ஒளி படாமல் இருப்பதே வைட்டமின் டி சத்து குறைபாடுக்கான முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.
வைட்டமின்-டி எலும்புகளை வலிமையாக பராமரிக்க உதவுவதோடு இதய நோய், நீரிழிவு, மூட்டு தேய்மானம் வராமல் தடுப்பதுடன் உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. உடலில் வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டால் இடுப்பு வலி, மூட்டு வலி, தசை பலவீனம் அல்லது தசைப்பிடிப்பு, எலும்பு வளர்ச்சி அல்லது பற்கள் தொடர்பான பிரச்சனைகள் காணப்படும்.
வைட்டமின் டி- இன் குறைபாடு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் வைட்டமின் டி-க்கும், இதய நோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது, எனினும் இது குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும், வைட்டமின் டி ஆனது இதயம் தொடர்பான பல நோய்களைத் தடுக்கிறது மற்றும் குளிர் காலத்தின் மந்தமான நேரங்களில் மனநிலையை மேம்படுத்துகிறது.
வைட்டமின் டி-இன் சரியான அளவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்து தவிர்க்கப்படுகிறது. வைட்டமின் டியின் போதுமான அளவு தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. தசைகள் வலுவாக இல்லாவிட்டால், நாம் அடிக்கடி கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுவோம், இது எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இந்த பிரச்சனை முதியவர்களுக்கு ஏற்படுத்தும். மேலும், வைட்டமின் டி ஆனது சேதமடைந்த அல்லது உடைந்த செல்களை சரிசெய்ய உதவுகிறது.
எனவே உங்கள் உணவில் போதுமான அளவு வைட்டமின் டி-ஐ சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். போதுமான அளவு சூரிய ஒளியுடன், சிக்கன், பால், மீன் போன்ற கடல் உணவுகள், முட்டையின் மஞ்சள் கருக்கள் மற்றும் காளான்கள் போன்ற உணவுகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. உணவின் மூலம் குறைவான வைட்டமின் டி சத்தே கிடைக்கும் என்றாலும் தவறாமல் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
First Published :
January 01, 2025 7:53 AM IST