இதனால் தான் கை நடுக்கம்.. தடுமாற்றம் - நடிகர் விஷால் விளக்கம்

2 weeks ago 13

Last Updated:January 06, 2025 4:37 PM IST

Vishal | வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் விஷால் பேசினார். அதில், "இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்" என்று பேசி கலகலப்பூட்டினார்.

News18

நடிகர் விஷால் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்வில் அவருக்கு கை நடுக்கம் ஏற்பட்டது. மேலும் அவரது பேச்சில் தடுமாற்றம் இருந்தது. இதனால் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். விஷால் உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரே விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'மதகஜராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 'மதகஜராஜா'வை தயாரித்தது. படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. அதன்படி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விஷால், சுந்தர்.சி, விஜய் ஆண்டனி ஆகியோர் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மூவரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் படம் குறித்து பேசினார்.

வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் விஷால் பேசினார். அதில், "இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்" என்று பேசி கலகலப்பூட்டினார்.

விஷாலின் கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பாக விஷால் தரப்பு அவரது மருத்துவ சீட்டை வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும், தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

January 06, 2025 4:33 PM IST

Read Entire Article