ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கணுமா..? லாக் செய்வது எப்படி தெரியுமா?

2 weeks ago 11

Last Updated:December 29, 2024 1:24 PM IST

உங்களுடைய ஆதார் அட்டை உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறதா அல்லது உங்களுடைய அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

News18

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது பல்வேறு விதமான சேவைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் பல்வேறு அரசு சார்ந்த திட்டங்களை பெறுவது வரை ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார, அரசு மற்றும் தனிப்பட்ட பலன்களைப் பெறுவதற்கு இது ஒரு அத்தியாவசிய ஆவணம். எனினும், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு சைபர் மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.

உங்களுடைய ஆதார் அட்டை உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறதா அல்லது உங்களுடைய அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதில் பொருளாதார மோசடி, திருட்டு மற்றும் தனி நபர்களின் தகவல்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் பெறுதல் போன்றவை அமையும்.

திருடப்பட்ட ஆதார் விவரங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் அதிகாரப்பூர்வமற்ற அணுகல் மற்றும் பொருளாதார மோசடிகளை செய்கின்றனர். இதன் விளைவாக தடை செய்யப்பட்ட சேவைகள், பணத்தை இழத்தல் அல்லது சட்டரீதியான பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாகலாம். இதன் காரணமாக உங்களுடைய ஆதார் பயன்பாடு பற்றிய வரலாற்றை சரிபார்ப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு வழியை வழங்குகிறது. இந்த அம்சத்தின் மூலமாக நீங்கள் உங்களுடைய ஆதார் நம்பர் எங்கு மற்றும் எப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Also Read: ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட் இதோ… உங்கள் வேலைகளை சரிபார்த்துக்கோங்க…

உங்களுடைய ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தால் பின்வரும் படிகளை பின்பற்றவும்

  • முதலில் 'மை ஆதார்' வெப்சைட்டுக்கு சென்று லாகின் செய்யவும். லாகின் செய்வதற்கு உங்களுடைய ஆதார் நம்பரை என்டர் செய்து, கேப்சா கோடை நிரப்பவும்.
  • பின்னர் 'லாகின் வித் OTP' என்பதை தேர்வு செய்யவும்.
  • இப்போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பி வைக்கப்படும். *வெரிஃபிகேஷன் செயல்முறையை நிறைவு செய்வதற்கு நீங்கள் OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்களுடைய ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கு 'ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி' பிரிவுக்கு சென்று, ஒரு குறிப்பிட்ட தேதிக்கான வரம்பை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஒருவேளை உங்களுடைய ஆதார் அட்டை அதிகாரப்பூர்வமற்ற முறையில் எங்கேயும் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தால், அதனை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் உடனடியாக புகார் அளிக்கவும்.

இதையும் படிக்க: கடன் பெற்றவர் இறந்துவிட்டால் திருப்பி செலுத்துவது யாருடைய பொறுப்பு தெரியுமா...?

உங்களுடைய ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை எப்படி லாக் செய்வது?

  • அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டுக்குச் செல்லவும்.
  • 'லாக்/அன்லாக் ஆதார்' பிரிவுக்கு செல்லுங்கள். இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து பார்க்கவும்.
  • உங்களுடைய வெர்சுவல் ID, பெயர், பின்கோடு மற்றும் கேப்சா கோடு போன்றவற்றை என்டர் செய்யவும்.

இதையும் படிக்க: 7.5% வரை அசத்தலான வட்டி தரக்கூடிய சிறுசேமிப்புத் திட்டங்கள்...!

  • 'சென்ட் OTP' என்பதை கிளிக் செய்து, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP-ஐ பெறவும்.
  • OTP பயன்படுத்தி செயல்முறை நிறைவு செய்து உங்களுடைய ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்யும்.

First Published :

December 29, 2024 1:24 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கணுமா...? லாக் செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்...!

Read Entire Article