Published: Wednesday, January 8, 2025, 13:46 [IST]
சிறு, குறு தொழில் முனைவோரை ஆதரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டு பல்வேறு தொழில்முனைவோர்கள் சிக்கலை எதிர்கொண்ட ஆண்டாக அமைந்தது. காரணம் கோவிட் 19 தொற்று நோய் பரவி பலத் தொழிலாளர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் "பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா" (PM Svanidhi Yojana). இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது
எவ்வளவு கடன் கிடைக்கும்?: இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு எந்த வித உத்தரவாதமுமின்றி ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை அவர்கள் சரிவர திருப்பிச் செலுத்தினால் அடுத்த முறை மீண்டும் 20,000 ரூபாய் கடன் பெறலாம். முந்தைய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் போது இந்தத் தொகை ரூ. 50,000 வரை உயரும். அதாவது 50,000 ரூபாய் வரை எந்தவித பினையவும் இல்லாமல் கடன் பெறலாம்.
பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற ஆதார் கார்டு அவசியம். வணிகர்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தி அரசு வங்கியில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பாக 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: PM ஸ்வநிதி இணையதளத்தின் படி கடன் பெற விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். கண்டிப்பாக உங்களுடைய மொபைல் நம்பர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைனில் விண்ணப்பம் செயல் முறையின் போது இ-கேஒய்சி சரிபார்ப்பு தேவைப்படும். கூடுதலாக கடன் வாங்குபவர்கள் அரசாங்க நலத்திட்டங்களில் பலன்பெற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் கடிதத்தை பெற வேண்டும்.
பிரதான் மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயன்பெற நான்கு விற்பனையாளர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். எனவே தகுதி அளவுகோல்களை சரி பார்த்து அதன் பிறகு விண்ணப்பிக்க வேண்டும். கடன் பெற நினைப்பவர்கள் நேரடியாக போர்ட்டல் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதம்: வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் வட்டி விகிதங்கள் நடைமுறையில் உள்ள விகிதங்களின் படி இருக்கும். NBFCகள், NBFC-MFI-கள் போன்றவற்றுக்கு, வட்டி விகிதங்கள் RBI வழிகாட்டுதல்களின்படி இருக்கும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Get Rs.50,000 Loan with Aadhaar Card. No Guarantee Required Under PM Svanidhi Yojana
Get a Rs.50,000 loan with just an Aadhaar card and no guarantee under the PM Svanidhi Yojana. Learn how to apply, eligibility criteria, and key details here!